(1784)

(1784)

கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல்

தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ புனையார்

மணிமாடப் புல்லாணி கைதொழுதேன்

வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே.

 

பதவுரை

கனை ஆர்இடி குரலின்

இடியிடித்தாற்போன்று மிக்க த்வநியோடு கூடின

கார்

கறுத்த

மணியின்

(மாட்டின் கழுத்திலுள்ள) மணியின்

நா ஆடல்

நாக்கு அசைந்து ஒலிப்ப தானது

தினையேனும் நில்லாது

தினையளவும் (கொஞ்சமும்) ஓயாமல்

தீயின்

நெருப்பைக் காட்டிலும்

கொடிது

கொடுமைபுரியாநின்றது;

புனை ஆர்மணி மாடம்

அழகுமிக்க மணிமாடங்களை யுடைய

புல்லாணி

திருப்புல்லாணியை

கைதொழுதேன்

தொழுவதற்கு ஆசைப்பட்டவளான

வினையேன் மேல்

பாவியேன் மேல்

வேலையும்

கடல்தானும்

வெம் தழலே

வெவ்விய நெருப்பையே

வீசும்

வீசுகின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இடி போன்ற ஒலியையுடைய மாட்டுக்கழுத்து மணிகளின் ஓசையானது நெருப்புக்கதுவுமாபோதலு கதுவி நலியாநின்றதே!; திருப்புல்லாணியைத் தொழவேணுமென்று ஆசைப்பட்ட எனக்கு நன்றாயிற்று. கடல்தானும் தனது குளிர்ச்சியெழிந்து வெப்பத்தை ஏறிட்டுக்கொண்டு அலைகளென்கிற வியாஜத்தினால் நெருப்பையே வீசுகின்றதே! என்செய்வேனென்கிறாள்.

வயல்களிலே பகலெல்லாம் மேய்ந்துவிட்டு மாலைப்பொழுதிலே மீண்டு வருகின்ற மாடுகளின் கழுத்திலுள்ள மணிகளின் ஓசை விரஹிகளுக்கு உத்தீபமாகும்; ;மாலைப்பொழுது அணுகிவிட்டதே! தலைவன் இன்னமும் வந்திலனே!; என்று வருத்தத்தையுண்டாக்கி அவ்வழியாலே உத்தீபமாகிற தென்க.

தினையேனும் = தினையென்பது மிகச் சிறியதொரு தானியம்; மிக அற்ப அளவுக்கு அதனை உவமை கூறுவதுண்டு; அற்பகாலமும் என்றபடி. தினையைக் கூறுவதுபோல் எள்ளையும் கூறுவதுண்டு; “எட்டனைப்போது; என்ற திருநெடுநதாண்டகங் காண்க.

 

English Translation

The ringing chime from the wagging tongue of the black bull;s neckbell never ceases, burning my soul hotter than fire; I joined my hands in worship of the Lord in Pullani with jewelled mansions.  Alas!  Even the waves of the sea  spit fire on my sinful self

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top