(1785)

(1785)

தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த

பாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு

பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன்

தேம்பலிளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே.

 

பதவுரை

தூம்பு உடை கை வேழம்

துளையையுடையத்தான துதிக் கையையுடைய (குவலயாபீடமென்னும்) யானையானது

வெருவ

அச்சமுறும்படி

மருப்பு ஒசித்த

(அதன்) கொம்புகளை முறித்த

பாம்பின் அணையான்

சேஷசாயியான பெருமான்

கைதொழுதேன்

தொழுவதற்கு ஆசைப்பட்டவளான

என் தனக்கு

எனக்கு

நமக்கு

நம் திறத்தில்

அருள் தந்த ஆ

அருள் செய்தவிதம் என்னே!;

பூ

அழகிய

செருந்தி

சுரபுன்னைமரங்கள்

பொன் சொரியும்

பொன்போன்ற மலர்களை உதிர்க்குமிடமான

புல்லாணி

திருப்புல்லாணியை

தேம்பல் இளபிறையும்

மிக இளைய சந்திரனும்

ஓர்வெம் தழல்

வெவ்விய நெருப்புப்போலுள்ளான

 

English Translation

The serpent-reclining Lord plucked the tusk of the rutted elephant, See how he gave us his grace! I joined my hands to worship Pullani where serundi trees spill golden flowers.  Alas, even the tender crescent Moon has become a spewer of fire for us

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top