(1748)
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளர வினணை மேவி
சங்கமா ரங்கைத் தடமல ருந்திச் சாமமா மேனியென் தலைவன்
அங்கமா றைந்து வேள்விநால் வேதம் அருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
பதவுரை
|
வங்கம் |
– |
மரக்கலங்களை யுடைத்தாய் |
|
மா |
– |
பெரிதான |
|
முந்நீர் |
– |
(திருப்பாற்) கடலிலே, |
|
வரி |
– |
பல கோடுகளையும் |
|
நிறம் |
– |
அழகையுமுடைய |
|
பெரிய |
– |
விசாலமான |
|
வாள் |
– |
ஒளி பொருந்திய |
|
அரவு |
– |
திருவனந்தாழ்வானாகிற |
|
இன் |
– |
இனிமையான |
|
அணை |
– |
படுக்கையிலே |
|
மேவி |
– |
பொருந்தி வர்த்திப்பவனும், |
|
என் தலைவன் |
– |
எம்பெருமான் (எங்கு எழுந்தருளியிருக்கிறனென்றால்) |
|
அங்கம் ஆறு |
– |
ஆறு வேதாங்கங்களென்ன |
|
ஐந்து வேள்வி |
– |
பஞ்சமஹாயஜ்ஞங்களென்ன |
|
நால் வேதம் |
– |
நான்கு வேதங்களென்ன |
|
அரு கலை |
– |
(வேதங்களுக்கு உபப்ரும் ஹணமாகவுள்ள) அருமையான நூல்களென்ன ஆகிய இவற்றை |
|
பயின்று |
– |
காலக்ஷேபமாகக் கொண்டு |
|
எரி மூன்றும் |
– |
த்ரேதாக்நிகளை |
|
செம் கையால் வளர்க்கும் |
– |
செவ்விய கைகளாலே ஓம்புகின்றவர்களும் |
|
துளக்கம் இல் மனத்தோர் |
– |
நிலைநின்ற அத்யவஸாய முடையவர்களுமான அஅந்தணர்வாழ்கிற |
|
திருக்கண்ணங்குடியுள் |
– |
திருக்கண்ணங்குடி யென்னுந் திருப்பதியிலே |
|
நின்றான் |
– |
எழுந்தருளியிருக்கிறான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருப்பாற்கடலில் பாம்பணையிற் பள்ளிகொள்ளுகின்ற வ்யூஹமூர்த்தியே திருக்கண்ணங்குடியில் அர்ச்சாவதார ரூபியாய் எழுந்தருளியுள்ள எம்பெருமானென்கிறார்.
வங்கம் – கப்பல்; கடலுக்குச் சிறப்பாகக் கூறும விசேஷணமிது, இனி இச்சொல்லை வடசொல்லின் சிதைவாகக்கொண்டால் அலை என்று பொருள் கொள்ளலாம்.
அங்கம் ஆறு = சீக்ஷா, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு. ஐந்துவேள்விகளாவன :– ப்ரஹ்மயஜ்ஞம், தேவயஜ்ஞம், பூதயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், மனுஷ்யஜ்ஞம் என்பனவாம். வேதமோதுதல் பிரமயஜ்ஞம்; பலியீதல் பூதயஜ்ஞம்; பித்ருக்களையுத்தேசித்துத் தர்ப்பணம்விடுதல் பித்ருயஜ்ஞம்; விருந்தினர்க்கு உணவளித்தல் மநுஷ்யயஜ்ஞம். நால்வேதமாவன :– ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்பன: தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் எனவிவை யென்றலுமுண்டு. அருங்கலை யென்றது – வேதங்களுக்கு உபப்ரும்ஹணமாகவுள்ள ஸ்மிருதீதி ஹாஸ புராணங்களை யென்ப. ஞானமனுட்டானமிவை நன்றாகவே யுடையரான மஹான்கள் வாழுமிடம் திருக்கண்ணங்குடி யென்றதாயிற்று.
துளக்கமில்மனத்தோர் = துளக்கமாவது கலக்கம்; அஃதில்லாத மனமுடையவர்களென்றது நல்ல விவேகமுடையவர்களென்றபடி : ‘நாம் செய்கிற கருமங்கள் நமக்கு ஸாதநமல்ல; எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபையே நமக்கு உஜ்ஜீவநோபாயம்’ என்னும் அத்யவஸாயத்தில் குலைதலற்றவர்களென்கை.
English Translation
Deep in the wide ocean, on a white serpent bed coil my Lord,- he is seen reclining, Bearing a white conch in hand and a beautiful lotus on navel of dark blue hue. Pure-hearted Vedic seers worship his standing form chanting the Mantras of sacred works, -Six Angas, Five Prasnas, Four Vedas, -and feeding three altar fires in Tirukkannangudi.
