(1749)

(1749)

கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக் கராம்கொளக் கலங்கியுள் நினைந்து

துவளமேல் வந்து தோன்றிவன் முதலை துணிபடச் சுடுபடை துரந்தோன்

குவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர் கொய்ம்மலர் நெய்தலொண் கழனி

திவளும்மா ளிகசூழ் செழுமணிப் புரிசைத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.

 

பதவுரை

கவளம்

கவளங்கொள்ளுமியல் புடையதும்

மா கதத்த

மிக்க மதத்தையுடையதுமான

கரி

கஜேந்திரன்

பொய்கை

ஒரு பொய்கையிலிருந்த

கராம்

முதலையினாலே

கொள

கௌவப்பட்டு

கலங்கி

கலக்கமடைந்து

உள் நினைந்து

(எம்பெருமானைச்) சிந்தித்து

துவள

வருந்திநின்றவளவிலே,

உய்ய

அது உஜ்ஜீவக்கும்படி

மேல் வந்து தோன்றி

மேல்வழியாய் எழுந்தருளி ஸேவைஸாதித்து

வன் முதலை

வலிவுள்ள (அந்த) முதலை

துணிபட

துண்டாக அறும்படி

சுடு படை

ஜ்வலிக்கின்ற திருவாழிப்படையை

துரந்தோன்

பிரயோகித்தருளின எம்பெருமான்,-

குவளை

கருநெய்தற்பூக்களென்ன

நீள் முளரி

பெரிய தாமரைப் பூக்களென்ன

குமுதம்

ஆம்பலென்ன

ஒண் கழுநீர்

செங்கழுநீரென்ன

கொய் மலர் நெய்தல்

பறிக்கைக்கு உரியமலரை யுடைத்தான நெய்தலென்ன ஆகிய இவற்றாலே

ஒண்

அழகுபெற்ற

கழனி

கழனிகளையுடையதும்

திவளும் மாளிகை சூழ்

பிரகாசிக்கின்ற திருமாளிகைகளாலே சூழப்பட்டதும்

செழு மணி புரிசை

சிறந்த ரத்நமயமான திருமதிளையுடையதுமான

திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருப்பதியில் வாழ்பவர்கள் வேத வேதாந்தங்கள் கைவந்தவர்களென்றது கீழ்ப்பாட்டில்.  அந்தவேதத்தின் முக்கிய தாத்பரியத்தைச் செய்கையில் அதற்குநேரும் இடையூறுகளை யொழித்து அக்கைங்கரியத்தைத் தானே கைக்கொண்டருளுமவன் எம்பெருமானென்பதை உணர்த்து மாறு ஸ்ரீகஜேந்திராழ்வானது வரலாற்றை இப்பாசுரத்தி லெடுத்துரைக்கின்றார்.

கவளம் என்று யானையுணவுக்குப்பெயர் ‘மாகதத்த’ என்னும் விசேஷணமும் சாதிக்குரியதாக இட்டதாம்.  கதம் – கோபம். கரி – வடசொல்.  ‘கரா’ என்றும் ‘கராம்’ என்றுமு் முதலைக்குப் பெயர். கொள – கொள்ள. துவள – ‘மிகவருந்திப் பறிக்கப்பட்ட இப்பூவை எம்பெருமானது திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பெறுகின்றிலோமே!’ என்றுவருத்தங் கொள்ள.  நீர்ப்பூவளமும் நகர்வளமும் சொல்வன பின்னடிகள்.

 

English Translation

The rutted elephant, caught in the jaws of the lake-crocodile wept an a contemplated the Lord in his heart when Lo! The Lord appeared in the sky, over the lake and sliced the crocodile’s jaws with his sharp discus! His standing form adoms the temple; of Tirukannangudi surrounded by jewelled mansions, high walls, ripe paddy fields, and water tanks filled with blue lilies, white lilies, red lilies, lotuses and Neidal flowers.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top