(1747)

(1747)

கண்டசீர்க் கண்ண புரத்துறை யம்மானை

கொண்டசீர்த் தொண்டன் கலிய னொலிமாலை

பண்டமாய்ப் பாடு மடியவர்க் கெஞ்ஞான்றும்

அண்டம்போ யாட்சி யவர்க்க தறிந்தோமே.

 

பதவுரை

கண்ட சீர்

கண்ணாலே ப்ரத்யக்ஷமாகக் காணக்கூடிய செல்வம் பொருந்திய

கண்ணபுரத்து

திருக்கண்ணபுரத்திலே

உறை

நித்யவாஸஞ்செய்தருள்கின்ற

அம்மானை

சௌரிப் பெருமான் விஷயமாக,

சீர் கொண்ட

ஸ்ரீ வைஷ்ணவலக்ஷமி வாய்ந்த

தொண்டன்

தாஸனான

கலியன்

திருமங்கைமன்னன்

ஒலி

அருளிச்செய்த

மாலை

இப்பாமாலையை

பண்டம் ஆய்

நிதியாகக் கொண்டு

பாடும்

பாடவல்ல

அடியவர்க்கு

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு

எஞ்ஞான்றும்

எப்போதும்

அண்டம் போய் ஆட்சி

பரமபதத்திலிருந்து கொண்டு வானகமாளப் பெறுவதாகும்;

அவர்க்கு அது அறிந்தோம்

அவர்கட்கு அதுவே பேறு என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருக்கண்ணபுரத் தெம்பெருமான் விஷயமாகக் கலியன் சொன்ன இப்பாமாலையை நிதியாகக் கொண்டு பாடும் அடியவர்கட்குத் திருநாட்டுச் செல்வத்தை ஆளப்பெறுவதே பேறாகும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

கண்டசீர்க்கண்ணபுரம் – பரமபதத்தின் சிறப்பை ஸ்ரீ வைகுண்டகத்யம் முதலான ஏட்டுப்புறங்களிலே காணலாமத்தனை யொழியக் கண்கொண்டு காண வொண்ணாது; அங்ஙனன்றியே திருக்கண்ணபுரத்தின் சிறப்பு ப்ரத்யக்ஷலக்ஷ்யமென்கை.

 

English Translation

This is a garland of sweet Tamil songs by dear-devoted kaliyan on the affluent Lord of kannapuram, Devotees who sing it with passion will rule over heaven, we know it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top