(1746)
நாட்டினா யென்னை யுனக்குமுன் தொண்டாக
மாட்டினே னத்தனையே கொண்டென் வல்வினையை
பாட்டினா லுன்னையென் நெஞ்சத் திருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே.
பதவுரை
|
கண்ணபுரத்து உறை அம்மானே!- ; |
||
|
முன் |
– |
முந்துற |
|
என்னை |
– |
அடியேனை |
|
உனக்கு |
– |
உனக்கு |
|
தொண்டு ஆக |
– |
அடியவனாக |
|
நாட்டினாய் |
– |
நிறுத்திக்கொண்டாய்; |
|
(அதற்குப்பிறகு அடியேன்) |
||
|
அத்தனையே கொண்டு |
– |
அவ்வளவே காரணமாக |
|
என் வல் வினையை |
– |
எனது கொடிய பாவங்களை |
|
மாட்டினேன் |
– |
மாளச்செய்தேன்; (அதுவுமன்றி) |
|
பாட்டினால் |
– |
இப்படிப்பட்ட பாசுரங்களினால் |
|
உன்னை என் நெஞ்சத்து இருந்தமை |
– |
நீ எனது நெஞ்சினுள் இருக்கிற படியை |
|
காட்டினாய் |
– |
விளங்கச்செய்தாய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தம்முடைய பாவங்கள் அகன்றுபோன படியையும் தாம் பெற்ற பேற்றையும் பேசித்தலைக்கட்டுகிறார்.
இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான முடிவில் “இவரைப் பாடுவித்த முக்கோட்டை யிருந்தபடி” என்றொரு வாக்யமுள்ளது. அதன் கருத்தாவது – மலையாளத்தில் ‘முக்கோட்டை’ என்று ஒரு இடமாம்; அவ்விடத்தில் ஊமைகள் சென்றாலும் அந்நில மிதியால் வெகு அழகாகக் கவி பாடுவர்களாம். (இதுமுற்கால வழக்கம் போலும்.) திருக்கண்ணபுரத்தை அந்த முக்கோட்டையாக ஆழ்வார் திருவுள்ளம்பற்றினபடி.
English Translation
O Lord of kannapuram! First you made me your servant. By that alone I was rid of all my karmas. Then through songs you revealed your presence in my heart!
