(1683)

(1683)

மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்,

பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி,

காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,

தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.

 

பதவுரை

கோல் தும்பீ!-

மார்வில் திருவன்

திருமார்பிலே ஸ்ரீ மஹாலக்ஷிமியை யுடையவனும்

வலன் ஏந்து சக்கரத்தன்

வலத்திருக்கையில் தரிக்கப்பட்ட திருவாழியையுடையவனும்

பாரை

(அண்டபித்தியில்) ஒட்டிக்கிடந்த பூமியை

பிளந்த பரமன்

(மஹாவராஹமாகிக்) குத்திக் கொணர்ந்த மேன்மை வாய்ந்தவனும்

பரம் சோதி

நிகரற்ற சோதியே வடிவெடுத்தவனும்

காரில் திகழ்

கறுப்பு நிறத்தினால் விளங்குகின்ற

காயா

காயாம்பூப்போன்ற

வண்ணன்

வடிவையுடையவனுமான பெருமானுடைய

கதிர் முடிமேல்

ஒளி பொருந்திய திருமுடிமீதுள்ள

தாரில்

மாலையில் (தொடுக்கப்பட்டிருக்கின்ற)

நறு

பரிமளம் மிக்க

துழாய்

திருத்துழாயில்

தாழ்ந்து

தங்கியிருந்து

ஊதாய்

(வந்து) ஊது.

 

English Translation

O Dragon-fly! He bears Sri on his chest, and a radiant discus on his right hand.  He is the great one who lifted the Earth, He has a radiant form, and the dark hue of the kaya flower, – come back and blow over me the fragrance of his Tulasi wreath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top