(1684)
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார்மன்னு தாச ரதியாய தடமார்வன்,
காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான்,
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
பதவுரை
|
வாமநன் |
– |
வாமநாவதாரஞ் செய்தவனும் |
|
கற்கி |
– |
கல்கியவதாரம் செய்யப் போகிறவனும் |
|
மது சூதன் |
– |
மதுவென்னு மசுரனைக் கொன்றவனும் |
|
மாதவன் |
– |
திருமகள் கொழுநனும் |
|
தார் மன்னு |
– |
(ரக்ஷகத்வஸூசகமான) மாலை பொருந்திய |
|
தட மார்வன் |
– |
பெரிய திருமார்பையுடையவனும் |
|
தாசரதி ஆய |
– |
தசரத புத்ரனாகத் திருவவதரித்தவனும் |
|
காமன் தன் தாதை |
– |
மன்மதனுக்குத் தந்தையுமான |
|
கண்ணபுரத்தெம்பெருமானுடைய-; |
||
|
தாமம் |
– |
மாலையிலுள்ள |
|
நறு |
– |
பரிமளம் மிக்க |
|
துழாய் |
– |
திருத்துழாயில் |
|
தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ!-. |
||
English Translation
O Dragon-fly! Go now to my Lord of Tirukkannapuram, -he is the manikin, he is kalki, Madhusudana, Madhava, and the anointed king Rama, son of Dasaratha. He has a broad chest, he is verily the love-god kama’s father, -come back and blow over me the fragrance of his Tulasi wreath.
