(1683)
மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்,
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி,
காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
பதவுரை
|
கோல் தும்பீ!- |
||
|
மார்வில் திருவன் |
– |
திருமார்பிலே ஸ்ரீ மஹாலக்ஷிமியை யுடையவனும் |
|
வலன் ஏந்து சக்கரத்தன் |
– |
வலத்திருக்கையில் தரிக்கப்பட்ட திருவாழியையுடையவனும் |
|
பாரை |
– |
(அண்டபித்தியில்) ஒட்டிக்கிடந்த பூமியை |
|
பிளந்த பரமன் |
– |
(மஹாவராஹமாகிக்) குத்திக் கொணர்ந்த மேன்மை வாய்ந்தவனும் |
|
பரம் சோதி |
– |
நிகரற்ற சோதியே வடிவெடுத்தவனும் |
|
காரில் திகழ் |
– |
கறுப்பு நிறத்தினால் விளங்குகின்ற |
|
காயா |
– |
காயாம்பூப்போன்ற |
|
வண்ணன் |
– |
வடிவையுடையவனுமான பெருமானுடைய |
|
கதிர் முடிமேல் |
– |
ஒளி பொருந்திய திருமுடிமீதுள்ள |
|
தாரில் |
– |
மாலையில் (தொடுக்கப்பட்டிருக்கின்ற) |
|
நறு |
– |
பரிமளம் மிக்க |
|
துழாய் |
– |
திருத்துழாயில் |
|
தாழ்ந்து |
– |
தங்கியிருந்து |
|
ஊதாய் |
– |
(வந்து) ஊது. |
English Translation
O Dragon-fly! He bears Sri on his chest, and a radiant discus on his right hand. He is the great one who lifted the Earth, He has a radiant form, and the dark hue of the kaya flower, – come back and blow over me the fragrance of his Tulasi wreath.
