(1682)
ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி,
பாரா ருலகம் பரவப் பெருங்கடலுள்,
காராமை யான கண்ணபுரத் தெம்பெருமான்,
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
பதவுரை
|
கோல் தும்பீ!- |
|
|
|
நீ |
– |
நீ |
|
ஏர் ஆர் மலர் எல்லாம் |
– |
அழகு நிரம்பிய (மற்ற புஷ்பங்களிலெல்லாம் |
|
ஊதி |
– |
ஒலி செய்து |
|
என் பெறுதி |
– |
என்னபேறு பெறுவாய்; (ஒன்றும் பெறமாட்டாய்.) |
|
பார் ஆர் உலகம் |
– |
இப்பூமியிலே பொருந்திய ஜனங்களெல்லாம் |
|
பரவ |
– |
வணங்குமாறு |
|
பெரு கடலுள் |
– |
பெரிய ஸமுத்ரத்தினுள்ளே |
|
கார் ஆமை ஆன |
– |
பெரிய ஆமையாகத் திருவவதரித்த |
|
கண்ணபுரத்தெம்பெருமானுடைய -; |
||
|
தார் ஆர் நறு துழாய் |
– |
மாலையிலே பொருந்திய பரிமளம் மிக்க திருத்துழாயிலே |
|
தாழ்ந்து ஊதாய் |
– |
வைகியிருந்து (வந்து) ஊது. |
English Translation
O Dragon-fly! what use hovering over all beautiful flowers? Go now to my Lord of Tirukkannapuram, -he came as a huge furtile in the deep ocean that girdles the Earth, -then come back and blow over me the fragrance of his Tulasi wreath.
