(1681)

(1681)

நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய்,

சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி,

கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான்,

தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.

 

பதவுரை

கோல் தும்பீ-

நீர்மலிகின்றது

ஸமுத்ரத்திலே வியாபித்த

ஓர் மீன் ஆய்

அத்விதீயமான மத்ஸ்யாவதாரமெடுத்தவனும்

ஓர் ஆமையும் ஆய்

விலக்ஷணமான கூர்மாவதார மெடுத்தவனும்

சீர் மலிகின்றது ஓர் சிங்கம் உரு ஆகி

சீர்மை மிகுந்த நரஸிம்ஹாவதார மெடுத்தவனும்

கார் மலி வண்ணன்

மேகத்திற்காட்டிலும் சிறந்த வடிவு பெற்றவனுமான

கண்ணபுரத் தெம்பெருமானுடைய-;

தார்

மாலையிலே

மலி

பொருந்திய

தண்

குளிர்ந்த

துழாய்

திருத்துழாயிலே

தாழ்ந்து

தாமதித்திருந்து

ஊதாய்

(வந்து) ஊது.

 

English Translation

O Dragon-fly! Go now to Lord of Tirukkannapuram, -He is the beautiful one who came as a fish in the deluge, as a furtile in the sea, and a man-lion in the yore, -come back and blow over me the fragrance of his Tulasi wreath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top