(1685)

(1685)

நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில்,

சால மலரெல்லா மூதாதே, வாளரக்கர்

காலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல்,

கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ.

 

பதவுரை

கோல் தும்பீ!-

நெடு நீர்

அதிகமான ஜலத்தையுடைய

வயல்

வயல்களிலுண்டான

நீலம் மலர்கள்

நீலோற்பல மலர்களிலும்

மருங்கில்

சுற்றிலுமுள்ள

மலர் எல்லாம்

எல்லா மலர்களிலும்

சால

மிகவும்

ஊதாதே

ஒலிசெய்வது தவிர்த்து

வாள் அரக்கர் காலன்

வாட்படையையுடைய ராக்ஷஸர்களுக்கு மிருத்யுவான

கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;

கதிர் முடி மேல்

ஒளி பொருந்திய திருமுடி மீதுள்ள

கோலம்

அழகிய

நறு

பரிமளம் மிக்க

துழாய்

திருத்துழாயை

கொண்டு ஊதாய்-.

 

English Translation

O Dragon-fly! Do not hover over the blue water lilies and the profuse flowers growing by if in the lakes, Go now to Tirukkannapuram, -He is the destroyer of mighty Rakshasas, -come back and blow over me the gragrance of his Tulasi wreath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top