(1682)

(1682)

ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி,

பாரா ருலகம் பரவப் பெருங்கடலுள்,

காராமை யான கண்ணபுரத் தெம்பெருமான்,

தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.

 

பதவுரை

கோல் தும்பீ!-

 

 

நீ

நீ

ஏர் ஆர் மலர் எல்லாம்

அழகு நிரம்பிய (மற்ற புஷ்பங்களிலெல்லாம்

ஊதி

ஒலி செய்து

என் பெறுதி

என்னபேறு பெறுவாய்;  (ஒன்றும் பெறமாட்டாய்.)

பார் ஆர் உலகம்

இப்பூமியிலே பொருந்திய ஜனங்களெல்லாம்

பரவ

வணங்குமாறு

பெரு கடலுள்

பெரிய ஸமுத்ரத்தினுள்ளே

கார் ஆமை ஆன

பெரிய ஆமையாகத் திருவவதரித்த

கண்ணபுரத்தெம்பெருமானுடைய -;

தார் ஆர் நறு துழாய்

மாலையிலே பொருந்திய பரிமளம் மிக்க திருத்துழாயிலே

தாழ்ந்து ஊதாய்

வைகியிருந்து (வந்து) ஊது.

 

English Translation

O Dragon-fly! what use hovering over all beautiful flowers? Go now to my Lord of Tirukkannapuram, -he came as a huge furtile in the deep ocean that girdles the Earth, -then come back and blow over me the fragrance of his Tulasi wreath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top