(1651)

(1651)

தாராய தண்டுளப வண்டுழுத வரைமார்பன் என்கின் றாளால்,

போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின் றாளால்,

ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக் கென்கின் றாளால்,

கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.

 

பதவுரை

தார் ஆய தண் துளபம்

–

மாலையாகிய குளிர்ந்த திருத்துழாயிலுள்ள

வண்டு

–

வண்டுகளாலே

உழுத

–

(தேனும் சுண்ணமுங்கொண்டு) சேறு செய்யப்பட்ட

வரை மார்பன்

–

மலைபோன்ற திருமார்பை யுடையவன்

என்கின்றாள் ஆல்;

போர் ஆனை

–

போர் புரிய நின்ற (கம்ஸனது) யானையினுடைய

கொம்பு ஒசித்த

–

தந்தங்களை முறித்தொழித்த

புள் பாகன்

–

கருடவாஹநன்

என் அம்மான்

–

எனக்கு ஸ்வாமி

என்கின்றாள் ஆல்;

ஆரானும் காண்மின்கள்

–

யாராகிலும்பாருங்கள்

அவனுக்கு

–

அப்பெருமானுடைய

வாய்

–

திருவதரமானது

அம் பவளம்

–

அழகிய பவளம் போல் சிவந்தது

என்கின்றாள் ஆல்… ;

கார் வானம்

–

கறுத்த மேகம்

நின்று அதிரும்

–

நிலைநின்று கோஷிக்கப்பெற்ற

கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ….

 

English Translation

Nectared and bee-fragrant garland of cool Tulasi on chest!”, she says, “My Lord the bird rider broke a tusk from rutted elephant”, she says, “Take a look, his coral lips are so matchiessly perfect”, she says. Dark-thunder-clouds-over-Kannapuram, has she then seen him? Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top