(1651)
தாராய தண்டுளப வண்டுழுத வரைமார்பன் என்கின் றாளால்,
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின் றாளால்,
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக் கென்கின் றாளால்,
கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
பதவுரை
|
தார் ஆய தண் துளபம் |
– |
மாலையாகிய குளிர்ந்த திருத்துழாயிலுள்ள |
|
வண்டு |
– |
வண்டுகளாலே |
|
உழுத |
– |
(தேனும் சுண்ணமுங்கொண்டு) சேறு செய்யப்பட்ட |
|
வரை மார்பன் |
– |
மலைபோன்ற திருமார்பை யுடையவன் |
|
என்கின்றாள் ஆல்; |
||
|
போர் ஆனை |
– |
போர் புரிய நின்ற (கம்ஸனது) யானையினுடைய |
|
கொம்பு ஒசித்த |
– |
தந்தங்களை முறித்தொழித்த |
|
புள் பாகன் |
– |
கருடவாஹநன் |
|
என் அம்மான் |
– |
எனக்கு ஸ்வாமி |
|
என்கின்றாள் ஆல்; |
||
|
ஆரானும் காண்மின்கள் |
– |
யாராகிலும்பாருங்கள் |
|
அவனுக்கு |
– |
அப்பெருமானுடைய |
|
வாய் |
– |
திருவதரமானது |
|
அம் பவளம் |
– |
அழகிய பவளம் போல் சிவந்தது |
|
என்கின்றாள் ஆல்… ; |
||
|
கார் வானம் |
– |
கறுத்த மேகம் |
|
நின்று அதிரும் |
– |
நிலைநின்று கோஷிக்கப்பெற்ற |
|
கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ…. |
||
English Translation
Nectared and bee-fragrant garland of cool Tulasi on chest!”, she says, “My Lord the bird rider broke a tusk from rutted elephant”, she says, “Take a look, his coral lips are so matchiessly perfect”, she says. Dark-thunder-clouds-over-Kannapuram, has she then seen him? Alas!
