(1650)
துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல் தோன்றுமால் என்கின் றாளால்,
மின்னுமா மணிமகர குண்டலங்கள் வில்வீசும் என்கின் றாளால்,
பொன்னின்மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின் றாளால்,
கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
பதவுரை
|
துன்னு |
– |
நெருங்கியிருக்கின்ற |
|
மா மணி |
– |
சிறந்த ரத்னங்களிழைக்கப்பெற்ற |
|
முடி மேல் |
– |
கிரீடத்தின் மீது |
|
துழாய் அலங்கல் |
– |
திருத்துழாய் மாலை |
|
தோன்றும ஆல் என்கின்றாள் ஆல் |
– |
விளங்குகின்றதே! என்று சொல்லுகிறாளே!; |
|
மின்னு |
– |
ஜ்வலிக்கின்ற |
|
மா மணி |
– |
சிறந்த மணிகளழுத்தின |
|
மகர குண்டலங்கள் |
– |
மகரக் குழைகள் |
|
வில் வீசும் என்கின்றாள் ஆல் |
– |
ஒளி வீசுகின்றன என்று சொல்லுகிறாளே! ; |
|
பொன்னின் மா மணி ஆரம் |
– |
பொன்னாலே செய்யப்பட்டதும் சிறந்த ரத்னங்களழுத்தப்பட்டதுமான ஹாரமானது |
|
அணி ஆகத்து |
– |
அழகிய திருமார்பிலே |
|
இலங்கும் ஆல் என்கின்றாள் ஆல் |
– |
விளங்கா நின்றதே! என்று சொல்லுகிறாளே! ; |
|
கன்னி மா மதில் |
– |
அழிவில்லாத பெரிய மதிள்களாலே |
|
புடை சூழ் |
– |
நாற்புறமும் சூழப்பட்ட |
|
கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ…. |
||
English Translation
“Over his fall germ crown he wears a wreath of fresh Tulasi”, she says. “His Makara fish ear-rings, gold set with germs, flash like lightening”, she says, “His gold-and-gern-necklace sways on his jewel-mighty broad chest”, she syas. Strong mighty walls rise in kannapuram, has she then seen him< Alas!
