(1652)
அடித்தலமும் தாமரையே அங்கையும் பங்கயமே என்கின் றாளால்,
முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத் துள்ளகலா என்கின் றாளால்,
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின் றாளால்,
கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
பதவுரை
|
அடித்தலமும் |
– |
திருவடிகளும் |
|
தாமரையே |
– |
தாமரைப்பூவே; |
|
அம் கைகளும் |
– |
அழகிய திருக்கைகளும் |
|
பங்கயமே |
– |
தாமரைப்பூவே; |
|
என்கின்றாள் ஆல்…, |
||
|
முடித்தலமும் |
– |
கிரீடமும் |
|
பொன் பூணும் |
– |
(அதிலிழைத்த) திருவாபரணமும் |
|
என் நெஞ்சத்துள் அகலாது |
– |
என் மனத்தைவிட்டுப் பிரியாது |
|
என்கின்றாள் ஆல்…. ; |
||
|
வடி |
– |
கூர்மை பொருந்திய |
|
தட கண் |
– |
பெரிய கண்களையுடையளான |
|
மலரவளோ |
– |
பங்கயச் செல்வியான பெரிய பிராட்டியாரோ வென்னில் |
|
வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாள் |
– |
மலைபோன்ற திருமார்பிலிருக்கிறாளென்று சொல்லுகிறாள்; |
|
கடி கமலம் |
– |
பரிமளமுள்ள தாமரைப்பூக்கள் |
|
கள் உகுக்கும் |
– |
தேனைப் பொழியப் பெற்ற |
|
கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ…, |
||
English Translation
“His feet are gold-lotus his hands are lotus hue-golden”, she says. His crown and golden jewels never leave my frail heart, O!” She says, alas! “Does not the dame-lotus-Lakshmi resides on his wide chest?”, She says, sweet-scented-lotus-in-kannapuram has she then seen him?, Alas!
