(1528)
பெடையடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம்
மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன்
இடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே.
பதவுரை
|
பெடை அடர்த்த |
– |
பேடையோடுகூடின |
|
மட அன்னம் |
– |
அழகிய ஹம்ஸபக்ஷியானது |
|
பிரியாது |
– |
அப்பேடையைச் சற்றும் விட்டும் பிரியாமல் உடனிருந்து |
|
கமலம் மலர் |
– |
தாமரைப்பூவில் |
|
மடல் எடுத்து |
– |
இதழ்களைக் கழற்றிவிட்டு |
|
மது நுகரும் |
– |
தேனைப் பருகப்பெற்ற |
|
வயல் |
– |
கழனிகளாலெ |
|
உடுத்த |
– |
சூழப்பட்ட |
|
திரு நறையூர் |
– |
திருநறையூரி லெழுந்தருளி யிருப்பவனாய்,- |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருமொழியில் பாட்டுத்தோறும் நெஞ்சை விளித்துத் திருநறையூர் நம்பியின் திருவடிகளை வணங்குமாறு உபதேசிக்கிறார்.
பெடை அடர்த்த மடவன்னம் = பேடைகள் பிரணயகலஹம் செய்யப்பெற்ற மடவன்னம் என்றுமுரைக்கலாம். அடர்த்தல் – நெருங்கியிருத்தலும் சண்டைசெய்தலும்.
முடையடர்த்த = துர்நாற்றமுடைய என்றபடி. சிரம் – என்னும் வடசொல்லின் விகாரம். பலி- ?????? ; பிச்சை.
English Translation
O Heart! The male-embracing fema swan pair slips the nectar from peta fallen lotus flowers in fertile fields C Tirunaraiyur; Siva, bearing the skull begging-bowl and rooming the three worlds, was relieved of his cur bythe Lord who is the husband Sri. Attain his feet.
