(1529)
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர்
பழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற
அழலாறும் சரந்துரந்தான் அடியிணையே யடைநெஞ்சே.
பதவுரை
|
கழி ஆரும் |
– |
உப்புக்கழிகளிலே நிரம்பியிருக்கின்ற |
|
கனம் சங்கம் |
– |
கனத்த சங்குகளானவை |
|
எங்கும் |
– |
எல்லாவிடங்களிலும் |
|
கலந்து |
– |
வந்துசேர்ந்து |
|
நிறைந்து |
– |
வரிசை வரிசையாக இருந்து |
|
ஏறி |
– |
பாய்ந்து |
|
வழி ஆர |
– |
வீதிகள் நிறையும்படியாக |
|
முத்து |
– |
முத்துக்களை |
|
ஈன்று |
– |
கரந்து |
|
வளம் கொடுக்கும் |
– |
(இப்படி) செல்வமளிக்கப்பெற்ற |
|
திருநறையூர் |
– |
திருநறையூரில்,- |
|
பழி ஆரும் |
– |
மிகுந்த அபவாதத்தையுடையனாய் |
|
விறல் |
– |
பலிஷ்டனான |
|
அரக்கன் |
– |
இராவணனுடைய |
|
பரு முடிகள் அவை சிதற |
– |
பருத்த (பத்துத்) தலைகளும் சிதறும்படியாக |
|
அழல் ஆகும் |
– |
நெருப்புப்போன்ற |
|
சரம் |
– |
அம்புகளை |
|
துரந்தான் |
– |
பிரயோகித்த பெருமானுடைய |
|
அடி இணையே, நெஞ்சே! அடை-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தீயசெயல்களினால் பழிமிகுந்த இராவணனுடைய பத்துத்தலைகளும் பாறிப்போம்படி அம்புசெலுத்தின பெருமான் இன்னமும் அப்படிப்பட்ட ஆஸுரப்ரக்ருதிகளை யழிப்பதற்காகத் திருக்கோயில் கொண்டிருக்குமிடம் திருநறையூர்; இவ்வூர்த் திருவீதிகளில் பொன்னியாறு பெருகும் போது கொழிக்கப்படும் சங்குகள் வழியெங்கும் முததுக்களைப் பிரஸவித்துச் செல்வம் நிறைந்திருக்கிறது; இப்படிப்பட்ட திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய அடியிணைகளை யடைவதே நெஞ்சுக்குக்காரியமாகவேணும்.
கனசங்கம் வடமொழித் தொடர்;
English Translation
O Heart! Salt pans overflow with oysters that spill over the streets heaping pearls and bountiful wealth in Tirunaraiyur; the blame-worthy wicked Rakshasa’s heavy heads rolled by the hot arrows of the bow-wielder Lord. Attain his feet.
