(1530)
சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய கதலிகளின்
திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர்
வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் மூவுலகோடு
அளைவெண்ணெ யுண்டான்தன் அடியிணையே யடைநெஞ்சே.
பதவுரை
|
சுளைகொண்ட |
– |
பல சுளைகளை யுடைத்தான |
|
பலங் கனிகள் |
– |
பலாப் பழங்களில் நின்றும் |
|
தேன் பாய |
– |
தேன் பெருகப்பெற்றும், |
|
கதலிகளின் |
– |
வாழைமரங்களின் |
|
திளைகொண்ட |
– |
பருத்திருந்துள்ள |
|
பழம் |
– |
பழங்கள் |
|
கெழுமு |
– |
நெருங்கப்பெற்று மிருக்கிற |
|
திகழ் சோலை |
– |
விளங்குகின்ற சோலைகளையுடைய |
|
திருநறையூர் |
– |
திருநறையூரில்,- |
|
வளை கொண்ட வண்ணத்தன் |
– |
சங்குபோல் வெளுத்த நிறமுடையனான பலராமனுடைய |
|
பின் தோன்றல் |
– |
தம்பியாயும் |
|
மூ உலகோடு |
– |
மூன்று லோகங்களையும் |
|
அளைவெண்ணெய் |
– |
தயிர் வெண்ணெயையும் |
|
உண்டான் தன் |
– |
அமுது செய்தவானயு மிருக்கிற எம்பெருமானுடைய |
|
அடி இணையே நெஞ்சே! அடை -. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வளைகொண்ட வண்ணத்தன் பன்தோன்றல் பலராமனுடைய திருமேனிநிறம் வெளுப்பாதலால் ‘வளைகொண்ட வண்ணத்தன்’ என்று பலராமனைச்சொன்னபடி. “முன்னலோர் வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடு விரைந்தோடப், பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன்” என்ற பெரியாழ்வாரருளிச்செயலுங் காண்க.
English Translation
O Heart! The slivers of jackfruit drip with honey on trees, while bananas slip out of their peels on fight bunches in plantations of Tirunaraiyur; the Lord who appeared as a younger brother of the conch-hued Balarama took the mil products and the world in one gulp. Attain his feet.
