(1547)
வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலிய னொலிமாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே.
பதவுரை
|
வாவி தடம் சூழ் |
– |
நடைவாவிகளாலும் தடாகங்களாலும் சூழப்பட்டதும் |
|
மணிமுத்தாறு |
– |
மணிமுத்தாற்றை யுடையதுமான |
|
நறையூர் |
– |
திருநறையூரி லெழுந்தருளியிருக்கிற |
|
நெடுமாலை |
– |
ஸர்வேச்வரனை |
|
நாவின் பரவி |
– |
நாவினால் துதித்தும் |
|
நெஞ்சில் கொண்டு |
– |
நெஞ்சில் சிந்தித்தும் |
|
நம்பி நாமத்தை |
– |
அந்தத் திருநறையூர் நம்பியின் திருநாமம் விஷயமாக |
|
காவி தட கண் மடவார்கேள்வன் |
– |
கருநெய்தற் பூப்போன்று பரந்த கண்களையுடைய மடவார்கட்கு விரும்பத் தகுந்தவராயிருந்த |
|
கலியன் |
– |
திருமங்கையாழ்வார் |
|
ஒலி |
– |
அருளிச்செய்த |
|
மாலை |
– |
இச்சொல்மாலையை |
|
மேவி |
– |
விரும்பி |
|
சொல்ல வல்லார் பாவம் |
– |
சொல்ல வல்லவர்களுடைய பாபங்கள் |
|
நில்லா |
– |
நிற்கமாட்டாமல் |
|
வீயும் |
– |
அழிந்துபோதும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருநறையூர் ஸந்நிதியருகிலுள்ள திவ்யபுஷ்கரிணிக்கு மணிமுத்தாறென்று திருநாமமென்ப. திருக்கோட்டியூரருகிற் பெருகும் மணிமுத்தாறு வேறு.
“காவித்தடங்கண் மடவார் கேள்வன்” என்றது முன்புற்ற நிலைமையைக் கணிசித்தா இவ்விடத்திலே வியாக்கியானவாக்யம காண்மின்; இப்போது எனக்குப் பிறந்த செவ்வியம் கண்டிகோளே; இப்போது மநோவாக்காயங்கள் மூன்றுக்கும் இதுவே விஷயமானரளி கண்டிகோளே.”
English Translation
These songs of the Lord’s Mantra in Tirunaraiyur surrounded by the Kaver’s Man-muttaru river, are by Kaliyan the husband of many wide-eyed dames, resident of Tirunaraiyur, Those who can master it will be rid of their karmic account.
