(1529)

(1529)

கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி

வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர்

பழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற

அழலாறும் சரந்துரந்தான் அடியிணையே யடைநெஞ்சே.

 

பதவுரை

கழி ஆரும்

உப்புக்கழிகளிலே நிரம்பியிருக்கின்ற

கனம் சங்கம்

கனத்த சங்குகளானவை

எங்கும்

எல்லாவிடங்களிலும்

கலந்து

வந்துசேர்ந்து

நிறைந்து

வரிசை வரிசையாக இருந்து

ஏறி

பாய்ந்து

வழி ஆர

வீதிகள் நிறையும்படியாக

முத்து

முத்துக்களை

ஈன்று

கரந்து

வளம் கொடுக்கும்

(இப்படி) செல்வமளிக்கப்பெற்ற

திருநறையூர்

திருநறையூரில்,-

பழி ஆரும்

மிகுந்த அபவாதத்தையுடையனாய்

விறல்

பலிஷ்டனான

அரக்கன்

இராவணனுடைய

பரு முடிகள் அவை சிதற

பருத்த (பத்துத்) தலைகளும் சிதறும்படியாக

அழல் ஆகும்

நெருப்புப்போன்ற

சரம்

அம்புகளை

துரந்தான்

பிரயோகித்த பெருமானுடைய

அடி இணையே, நெஞ்சே! அடை-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தீயசெயல்களினால் பழிமிகுந்த இராவணனுடைய பத்துத்தலைகளும் பாறிப்போம்படி அம்புசெலுத்தின பெருமான் இன்னமும் அப்படிப்பட்ட ஆஸுரப்ரக்ருதிகளை யழிப்பதற்காகத் திருக்கோயில் கொண்டிருக்குமிடம் திருநறையூர்; இவ்வூர்த் திருவீதிகளில் பொன்னியாறு பெருகும் போது கொழிக்கப்படும் சங்குகள் வழியெங்கும் முததுக்களைப் பிரஸவித்துச் செல்வம் நிறைந்திருக்கிறது; இப்படிப்பட்ட திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய அடியிணைகளை யடைவதே நெஞ்சுக்குக்காரியமாகவேணும்.

கனசங்கம் வடமொழித் தொடர்;

 

English Translation

O Heart! Salt pans overflow with oysters that spill over the streets heaping pearls and bountiful wealth in Tirunaraiyur; the blame-worthy wicked Rakshasa’s heavy heads rolled by the hot arrows of the bow-wielder Lord. Attain his feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top