(1523)

(1523)

உம்பருலகோடு உயிரெல்லாம் உந்தியில்

வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை

அம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை

நம்பனை நாடி நறையூரில் கண்டேனே.

 

பதவுரை

உம்பர் உலகோடு உயிர் எல்லாம்

தேவலோகத்தோடு கூட (மற்றுமுள்ள மநுஷ்யாதி பிராணிகளையும்

உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை

(தனது) திருநாபியிலுள்ள பரிமளம்மிக்க தாமரைப் பூவிலே ஸ்ருஷ்டித்தவனும்

மாயோனை

ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவனும்

அம்பு அன்ன கண்ணாள்

அம்புபோன்ற கண்களை யுடையவளான

அசோதை தன்

யசோதைப்பிராட்டியின்

சிங்கத்தை

சிங்கக்குட்டி போன்ற பிள்ளையும்

நம்பனை

ஆச்ரிதர்களுக்கு நம்பத்தகுந்தவனுமான எம்பெருமானை

நாடி, நறையூரில் கண்டேன்-.

 

English Translation

The wonder-Lord created the Universe, gods and men, on his lotus-navel-flower.He is the lion-club of sharp eyed Yasoda.  With faith, I have found him in Naraiyur.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top