(1523)
உம்பருலகோடு உயிரெல்லாம் உந்தியில்
வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே.
பதவுரை
|
உம்பர் உலகோடு உயிர் எல்லாம் |
– |
தேவலோகத்தோடு கூட (மற்றுமுள்ள மநுஷ்யாதி பிராணிகளையும் |
|
உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை |
– |
(தனது) திருநாபியிலுள்ள பரிமளம்மிக்க தாமரைப் பூவிலே ஸ்ருஷ்டித்தவனும் |
|
மாயோனை |
– |
ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவனும் |
|
அம்பு அன்ன கண்ணாள் |
– |
அம்புபோன்ற கண்களை யுடையவளான |
|
அசோதை தன் |
– |
யசோதைப்பிராட்டியின் |
|
சிங்கத்தை |
– |
சிங்கக்குட்டி போன்ற பிள்ளையும் |
|
நம்பனை |
– |
ஆச்ரிதர்களுக்கு நம்பத்தகுந்தவனுமான எம்பெருமானை |
|
நாடி, நறையூரில் கண்டேன்-. |
||
English Translation
The wonder-Lord created the Universe, gods and men, on his lotus-navel-flower.He is the lion-club of sharp eyed Yasoda. With faith, I have found him in Naraiyur.
