(1373)

(1373)

பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான்,

அங்கொ ராமைய தாகிய வாதிநின் அடிமை யையரு ளெனக்கு,

தங்கு பேடையொ டூடிய மதுகரம் தையலார் குழல ணைவான்,

திங்கள் தோய்சென்னி மாடம்சென்றணை திருவெள்ளறை நின்றானே!

 

பதவுரை

தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்

பூவிலே தங்கியிருந்த பெண் வண்டோடு பிரணய கலஹங்கொண்ட ஆண் வண்டு

தையலார் குழல் அணைவான்

ஸ்த்ரிகளினுடைய கூந்தல்களைச் சென்று கிட்டி அங்கே மறைந்திருக்கைக்காக,

திங்கள் தோய் சென்னி மாடம் சென்ற அணை

சந்திரமண்டலத்திலே படிந்திருக்கிற சிகரங்களையுடைய மாளிகைகளை சென்று சேர்ந்திருக்கப்பெற்ற

திருவெள்ளறை, நின்றானே!;

பொங்கு

விளங்குகின்ற

நீள் முடி

நீண்ட கிரீடத்தை யுடையரான

அமரர்கள்

தேவர்கள்

தொழுது எழ

(தன்னை) வணங்கி யாச்ரயிக்க

(அவர்களுக்கு இரங்கி)

அமுதினை கொடுத்து அளிப்பான்

அமிருதத்தைத் தந்தருள்வதற்காக

அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி

அப்போது விலக்ஷணமான கூர்மமாகத் திருவவதரித்த காரணபூதனே!

நின் அடிமையை எனக்கு அருள்

உனக்கு நான் அடியனாயிருக்கப் பெறுவதை எனக்கு அருளவேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (தங்குபேடையோடு இத்யாதி.) வண்டுகள் ஆணும் பெண்ணுமாய்ப் பூவிலே படுத்திருந்தன; தம்பதிகளுக்குப் பிரணயகலஹம் இயற்கையாகையாலே ஊடல் உண்டாயிற்று; உடனே ஆண்வண்டானது பேடைக்குத் தெரியாததோரிடந்தேடி மறையவேணும் என்றெண்ணி ஸ்த்ரீகளினுடைய கூந்தலிலே மறையக்கோலி, சந்திர மண்டலத்தளவுஞ் சென்றோங்கின சிகரத்தையுடைய மாடங்களிலே சென்றணைகின்றதாம் திருவெள்ளறையில்.

 

English Translation

O Lord residing in Tiruvellarai, where lover-bees in the coiffure of dames fall out on each other and fly away in a huff to their hives on top of mansions that touch the moon!  In the yore you came as a turtle and gave ambrosia to the gods, that they may live and worship you.  Pray grace me with service to you !

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top