(1383)
கலையு டுத்த அகலல்குல் வன்பேய்மகள் தாயென,
முலைகொ டுத்தா ளுயிருண் டவன்வாழுமிட மென்பரால்,
குலையெ டுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி, முன்
அலையெ டுக்கும் புனற்கா விரிசூழ்தென் னரங்கமே,
பதவுரை
|
குலை எடுத்த கதலி பொழில் ஊடும் வந்து |
– |
குலைகள் ஓங்கியிருக்கப் பெற்ற வாழைத்தோப்பு களினுள்ளே புகுந்து |
|
(அம்மரங்களை வேரோடே பறித்துக்கொண்டு) |
||
|
முன் உந்தி அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் |
– |
முன்னே தள்ளி அலைவீசியடியாநின்ற தீர்த்தத்தையுடைத்தான காவேரியினால் சூழப்பட்ட |
|
தென் அரங்கம்; |
||
|
கலை உடுத்த அகல் அல்குல் தாய் என |
– |
பட்டாடையணிந்த அகன்ற நிதம்பத்தையுடையளான தாயாகிய யசோதைபோல (வந்து) |
|
முலை கொடுத்தாள் வன் பேய்மகள் |
– |
முலையுண்ணக் கொடுத்தவளான வலிய (பூதனையென்னும்) பேய்ச்சியினுடைய |
|
உயிர் உண்டவன் வாழ்இடம் என்பர் |
– |
பிராணனை உறிஞ்சி உண்ட கண்ணபிரான் வாழும் திவ்யதேசம் என்று சொல்லுவர் |
English Translation
Oh, they say the Southern Arangam, -surrounded by the swift waters of the Kaveri that flows through banana plantations and carries away the fruit in its laps, -is the abode of the Lord who took the life of the ogress who came disguised as a beautiful nurse and gave the child suck from her poisoned breast.
