(1373)
பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான்,
அங்கொ ராமைய தாகிய வாதிநின் அடிமை யையரு ளெனக்கு,
தங்கு பேடையொ டூடிய மதுகரம் தையலார் குழல ணைவான்,
திங்கள் தோய்சென்னி மாடம்சென்றணை திருவெள்ளறை நின்றானே!
பதவுரை
|
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம் |
– |
பூவிலே தங்கியிருந்த பெண் வண்டோடு பிரணய கலஹங்கொண்ட ஆண் வண்டு |
|
தையலார் குழல் அணைவான் |
– |
ஸ்த்ரிகளினுடைய கூந்தல்களைச் சென்று கிட்டி அங்கே மறைந்திருக்கைக்காக, |
|
திங்கள் தோய் சென்னி மாடம் சென்ற அணை |
– |
சந்திரமண்டலத்திலே படிந்திருக்கிற சிகரங்களையுடைய மாளிகைகளை சென்று சேர்ந்திருக்கப்பெற்ற |
|
திருவெள்ளறை, நின்றானே!; |
||
|
பொங்கு |
– |
விளங்குகின்ற |
|
நீள் முடி |
– |
நீண்ட கிரீடத்தை யுடையரான |
|
அமரர்கள் |
– |
தேவர்கள் |
|
தொழுது எழ |
– |
(தன்னை) வணங்கி யாச்ரயிக்க |
|
(அவர்களுக்கு இரங்கி) |
||
|
அமுதினை கொடுத்து அளிப்பான் |
– |
அமிருதத்தைத் தந்தருள்வதற்காக |
|
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி |
– |
அப்போது விலக்ஷணமான கூர்மமாகத் திருவவதரித்த காரணபூதனே! |
|
நின் அடிமையை எனக்கு அருள் |
– |
உனக்கு நான் அடியனாயிருக்கப் பெறுவதை எனக்கு அருளவேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (தங்குபேடையோடு இத்யாதி.) வண்டுகள் ஆணும் பெண்ணுமாய்ப் பூவிலே படுத்திருந்தன; தம்பதிகளுக்குப் பிரணயகலஹம் இயற்கையாகையாலே ஊடல் உண்டாயிற்று; உடனே ஆண்வண்டானது பேடைக்குத் தெரியாததோரிடந்தேடி மறையவேணும் என்றெண்ணி ஸ்த்ரீகளினுடைய கூந்தலிலே மறையக்கோலி, சந்திர மண்டலத்தளவுஞ் சென்றோங்கின சிகரத்தையுடைய மாடங்களிலே சென்றணைகின்றதாம் திருவெள்ளறையில்.
English Translation
O Lord residing in Tiruvellarai, where lover-bees in the coiffure of dames fall out on each other and fly away in a huff to their hives on top of mansions that touch the moon! In the yore you came as a turtle and gave ambrosia to the gods, that they may live and worship you. Pray grace me with service to you !
