(1363)

(1363)

தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்,

துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்,

எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும்

கொக்கின் பழம்வீழ் கூட லூரே!

 

பதவுரை

தக்கன் வேள்ளி தகர்த்த தலைவன்

–

தக்ஷப்ரஜாபதியினுடைய யாகத்தை அழித்தவனான சிவபிரானுடைய

துக்கம் துடைத்த

–

துயரத்தைப் போக்கின

துணைவர்

–

ஆபத்பந்துவான பெருமானுடைய

ஊர்

–

திவ்யதேசம்;

எக்கல் இடு

–

வண்டல்படிந்த

நுண் மணல் மேல் எங்கும்

–

நுட்பமான மணல்களுள்ளவிடமெங்கும்

கொக்கின் பழம

–

மாம்பழங்கள்

வீழ்

–

விழுந்திருக்கப்பெற்ற

கூடலூர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சங்கரன் கொண்ட சாபத்தைத் தீர்த்த பெருமான் வாழுமிடம் திருக்கூடலூர்.  (எக்கல் இத்யாதி.) வண்டலிட்ட நுண்ணிய மணல்களில் மாம்பழங்கள் விழுந்து வரிசையாகக் கிடக்கிறபடியைப் பார்த்தால் பழுக்கைக்குப் பதித்துவைத்தாற் போன்றுள்ள தென்னலாம்.

 

English Translation

Siva who destroyed the Daksha-sacrifice found a comforting superior in the Lord, he resides in kudalur where raw Mangos dropping from trees ripen in the cosy sand dunes of the river everywhere.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top