(1377)
மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு வெள்ளறை யதன்மேய,
அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை ஆதியை யமுதத்தை,
நஞ்சு லாவிய வேல்வல வன்கலி கன்றிசொல் ஐயிரண்டும்,
எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை யோர்க்ர சாவார்க்களே.
பதவுரை
|
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் |
– |
மேகங்கள் படிந்து உலாவப்பெற்ற நவரத்நங்கள் பதித்த மாளிகைகளினால் சூழப்பட்ட |
|
திருவெள்ளறை அதன் மேய |
– |
திருவெள்ளறையில் நித்ய வாஸம் செய்பவனும் |
|
அஞ்சனம் புரையும் திரு உருவனை |
– |
மை போன்ற திவ்யமான வடிவையுடையவனும் |
|
ஆதியை |
– |
ஸகல ஜகத்காரண பூதனும் |
|
அமுதத்தை |
– |
அமுதம்போல் போக்யனுமான எம்பெருமானை, |
|
நஞ்சு உலாவிய வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும் |
– |
விஷம்தங்கிய வேற்படையைச் செலுத்தவல்லவரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இப்பத்துப் பாசுரங்களைக் கொண்டு |
|
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் |
– |
குறைவின்றி மனம் நிலைபெற்று துதிக்க வல்லவர்கள் |
|
இமையோர்க்கு அரசு ஆவர்கள் – |
– |
நித்யஸூரிகளுக்கும் ஆதரிக்கத் தக்கவராவலர்கள் |
English Translation
This garland of sweet Tamil songs by sharp spear-wielding kalikanri on the Lord of the fall-mansioned Tiruvellarai, the first-cause Lord, ambrosia, dark radiant beautiful form, -those who can master it will live as king of gods
