(1377)

(1377)

மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு வெள்ளறை யதன்மேய,

அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை ஆதியை யமுதத்தை,

நஞ்சு லாவிய வேல்வல வன்கலி கன்றிசொல் ஐயிரண்டும்,

எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை யோர்க்ர சாவார்க்களே.

 

பதவுரை

மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்

மேகங்கள் படிந்து உலாவப்பெற்ற நவரத்நங்கள் பதித்த மாளிகைகளினால் சூழப்பட்ட

திருவெள்ளறை அதன் மேய

திருவெள்ளறையில் நித்ய வாஸம் செய்பவனும்

அஞ்சனம் புரையும் திரு உருவனை

மை போன்ற திவ்யமான வடிவையுடையவனும்

ஆதியை

ஸகல ஜகத்காரண பூதனும்

அமுதத்தை

அமுதம்போல் போக்யனுமான எம்பெருமானை,

நஞ்சு உலாவிய வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்

விஷம்தங்கிய வேற்படையைச் செலுத்தவல்லவரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இப்பத்துப் பாசுரங்களைக் கொண்டு

எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்

குறைவின்றி மனம் நிலைபெற்று துதிக்க வல்லவர்கள்

இமையோர்க்கு அரசு ஆவர்கள் –

நித்யஸூரிகளுக்கும் ஆதரிக்கத் தக்கவராவலர்கள்

 

English Translation

This garland of sweet Tamil songs by sharp spear-wielding kalikanri on the Lord of the fall-mansioned Tiruvellarai, the first-cause Lord, ambrosia, dark radiant beautiful form, -those who can master it will live as king of gods

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top