(1387)
அல்லி மாத ரமரும் திருமார்வ னரங்கத்தை,
கல்லின் மன்னு மதிள்மங் கையர்கோன்கலி கன்றிசொல்,
நல்லிசை மாலைகள் நாலி ரண்டுமிரண் டுமுடன்,
வல்லவர் தாமுல காண்டு பின்வானுல காள்வரே.
பதவுரை
|
அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை |
– |
பூவிற் பிறந்த பெரியபிராட்டியா பொருந்தி வாழப்பெற்ற திருமார்வையுடையனான ஸர்வேச்வரனுடைய திருவரங்கம் விஷயமாக, |
|
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலிகன்றி |
– |
கல்லாலே கட்டப்பட்ட திடமாயிக்கிற மதிளையுடைத்தான திருமங்கை நகரில் உள்ளவர்களுக்கு தலைவரான ஆழ்வார் |
|
சொல் நல் இசை மாலைகள் |
– |
அருளிச்செய்த நல்ல இசையோடு கூடின சொல் மாலையாகிய |
|
நாலிரண்டும் இரண்டும் |
– |
இப்பத்துப்பாட்டுக்களையும் |
|
உடன் வல்லவர்தாம் |
– |
கருத்தோடுகூட ஓதவல்லவர்கள் |
|
உலகு ஆண்டு |
– |
இவ்வுலகில் (கோயில் வாழ்ச்சியை) அநுபவித்து |
|
பின் வான் உலகு ஆள்வர் |
– |
பரமபதாநுபவத்தைப் பெறக்கடவர். |
English Translation
This garland of sweet Tamil songs is on the Lord of Arangam with lotus-lady Lakshmi on the his chest, by the strong walled Mangai king Kalikanri, -those who master it will rule the Earth, then rule the sky as well.
