(1367)
காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன்
மேவித் திகழும் கூட லூர்மேல்,
கோவைத் தமிழால் கலியன் சொன்ன,
பாவைப் பாடப் பாவம் போமே.
பதவுரை
|
காலி பெரு நீர் வண்ணன் கண்ணன் |
– |
கருநெய்தற் பூப்போலவும் கடல்போலவும் நிறமுடையனான எம்பெருமான் |
|
மேவி திகழும் கூடலூர் மேல் |
– |
பொருந்தி விளங்கப்பெற்ற கூடலூர் விஷயமாக |
|
கலியன் |
– |
திருமங்கைமன்னன் |
|
கோவை தமிழால் சொன்ன |
– |
ஒழுங்கான தமிழினால் அருளிச் செய்த |
|
பாவை |
– |
இப்பாசுரங்களை |
|
பாட |
– |
பாடவே |
|
பாவம் போம் |
– |
பாவங்கள் தொலைந்துபோம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- காவி – நீலோற்பலம். காவிப் பெருநீர் – உம்மைத்தொகை. கோவைத் தமிழ் – ஒழுங்கான தமிழ். கோக்கப்பட்ட மாலைக்கும் கோவை யென்று பெயராதலால், மாலைபோல் போக்கியமான தமிழ் என்னவுமாம்.
English Translation
Those who can sing this garland of sweet Tamil songs by Kaliyan,-on the dark water-lily-hued krishna who resides in Kudalur, -will destroy karmas.
