(1447)

(1447)

நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் நண்ணி யுறையும்,

உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை யானை, ஒளிசேர்

கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை யைந்து மைந்தும்,

முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள் முழுத கலுமே.

 

பதவுரை

நறை செய் பொழில் மழை தவழும்

தேன் மிக்க சோலைகளில் மேகங்கள் வந்து சேரப்பெற்ற

நந்திபுரவிண்ணகரம்

நந்திபுரவிண்ணகர மென்னுந் திருப்பதியை

நண்ணி

அடைந்து

உறையும்

அங்கே நித்யவாஸம் பண்ணுமிடத்து

உறை கொள் புகர் ஆழி

உறையிலிடப்பட்டுத் தேஜஸ்ஸு மிகுந்த திருவாழியையும்

சுரி சங்கம்

வலம்புரிச் சங்கத்தையும்

அவை

மற்றுமுள்ள திவ்யாயுதங்களையும்

அம் கை உடையானை

அழகிய திருக்கையிலுடையனான எம்பெருமானைக் குறித்து,

கறை வளரும்

ரக்தக்கறை மிக்கிருப்பதும்

ஒளி சேர்

ஒளிபொருந்தியதுமான

வேல்

வேற்படையை

வல்ல

ஆளவல்ல

கலியன் ஒலி

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

இவை மாலை

இத்திவ்யப் பிரபந்தத்தினுள்

இவை ஐந்தும் ஐந்தும்

இப்பத்துப் பாசுரங்களையும்

முறையில்

கிரமப்படியே

பயில வல

அதிகரிக்கவல்ல

அடியவர்கள்

பக்தர்களுடைய

கொடு வினைகள் முழுது

பாவங்களெல்லாம்

அகலும்

நீங்கியொழியும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “உறைகொள் புகராழி” என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை யருளிச்செய்யும் ஸ்ரீஸூக்திகாண்மின் :- “விரோதி நிரஸநத்துக்குத் திருமங்கையாழ்வார் கையில் வேலுண்டானபின்பு திருவாழி உறையிட்டிருக்குங்காண்” என்று.  கறைவளரும் வேல்வல்லவனான கலியனே விரோதிகளை வென்று உலகத்தை யாள்கின்றமையால் எம்பெருமானுடைய திருவாழிப் படைக்குக் காரியமில்லையாக, உறையிலிடவேண்டிற்றாயிற்றென்க, ஆழ்வாருடைய வேல் அப்படி உறையில் கிடக்கமுடியாது; சத்ருநிரஸநம்பண்ணின கறை கழுவுதற்கும் அவகாசமின்றியே வியாபரிக்குமாம்.

 

English Translation

This garland of ten songs, by sharp spear-wielder Kaliyan extol the Lord of discus and couch residing amid the fragrant groves of Nandipura Vinnagaram.   Devotees who master it will be freed of terrible karmas.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top