(1367)

(1367)

காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன்

மேவித் திகழும் கூட லூர்மேல்,

கோவைத் தமிழால் கலியன் சொன்ன,

பாவைப் பாடப் பாவம் போமே.

 

பதவுரை

காலி பெரு நீர் வண்ணன் கண்ணன்

கருநெய்தற் பூப்போலவும் கடல்போலவும் நிறமுடையனான எம்பெருமான்

மேவி திகழும் கூடலூர் மேல்

பொருந்தி விளங்கப்பெற்ற கூடலூர் விஷயமாக

கலியன்

திருமங்கைமன்னன்

கோவை தமிழால் சொன்ன

ஒழுங்கான தமிழினால் அருளிச் செய்த

பாவை

இப்பாசுரங்களை

பாட

பாடவே

பாவம் போம்

பாவங்கள் தொலைந்துபோம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- காவி – நீலோற்பலம்.  காவிப் பெருநீர் – உம்மைத்தொகை.  கோவைத் தமிழ் – ஒழுங்கான தமிழ்.  கோக்கப்பட்ட மாலைக்கும் கோவை யென்று பெயராதலால், மாலைபோல் போக்கியமான தமிழ் என்னவுமாம்.

 

English Translation

Those who can sing this garland of sweet Tamil songs by Kaliyan,-on the dark water-lily-hued krishna who resides in Kudalur, -will destroy karmas.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top