(1445)
எண்ணில்நினை வெய்தியினி யில்லை யிறை யென்றுமுனி யாளர் திருவார்,
பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு கூட எழிலார்,
மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள் தாம லர்கள்தூய்
நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.
பதவுரை
|
எண்ணில் |
– |
ஆராயுமளவில் |
|
நினைவு எய்தி இறை |
– |
தியானத்திற்கு இலக்காகக் கூடிய ஸ்வாமி |
|
இனி இல்லை என்று |
– |
இவனைக் காட்டிலும் வேறொருவனில்லை யென்று (நிச்சயித்து) |
|
முனியாளர் |
– |
மஹாமுனிகள் |
|
திரு ஆர் பண்ணில் மலி |
– |
அழகுமிக்க இசையினால் நிறைந்த |
|
கீதமொடு பாடி |
– |
பாடல்களோடு கூட ஸ்துதிகள் செய்ய, |
|
அவர் ஆடலொடு கூட |
– |
அந்த முனிவர் (தங்கள் பாட்டுக்குச் சேரத் தாங்களே செய்கின்ற) நர்த்தனங்களுக்குத் தகுதியாக, |
|
வானவர்கள் தாம் |
– |
தேவர்கள் |
|
எழில் ஆர் மண்ணில் |
– |
இப்பூலோகத்தில் |
|
இது போலும் நகர் இல்லை என |
– |
இத்திருப்பதியைப் போன்ற நகரம் (எங்கும்) இல்லை’ என்று கொண்டாடி |
|
மலர்கள் தூய் |
– |
புஷ்பங்களைப் பணிமாறி |
|
நண்ணி |
– |
ஆச்ரயித்து |
|
உறைகின்ற |
– |
நித்யவாஸமும் செய்யப்பெற்ற |
|
நகர் |
– |
திவ்யதலமாகிய |
|
நந்திபுரவிண்ணகரம், மனமே நண்ணு–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸநகஸநந்தநாதி மஹர்ஷிகள் ‘இப்பெருமானன்றிப் பரதெய்வம் பிறிதொன்றுமில்லை’ என்று துணிந்து ழூபண்ணார் பாடலில் கவிகளைச் சொல்லிப் பாடி ஆடுகின்றனராம்; அவர்களோடு கூட வானவர்களும் ‘பூமண்டலத்தில் இதுபோன்ற திவ்யதேசம் வேறொன்றில்லை’ என்று புகழ்ந்துகொண்டு திரண்டு வாழ்கின்றனராம். ஆகவிப்படி முனிவருமமரரும் தொழுதேத்தி இறைஞ்சுமிடமான நந்திபுரவிண்ணகரத்தை மனமே! நண்ணு என்றாராயிற்று.
(நினைவு எய்தி,) ‘எய்தி’ என்பது வினையெச்ச மன்று; பெயர்ச்சொல்; எய்து – பகுதி; இ-பெயர்விகுதி. எய்துமவன் என்கை. (நினைப்பாருடைய) நினைவுகளை எய்துமவன் – த்யானத்திற்கு விஷயமாயிருக்குமவன் என்றபடி. இனி ‘எய்தி’ என்றவிதனை வினையெச்சமாகக்கொண்டு முரைக்கலாம்; எண் இல் – கணக்கில்லாத (அளவிறந்த), நினைவு – எண்ணங்களை எய்தி – அடைந்து, ‘முனியாளர் கீதமொடுபாடி, என்றதோடு அந்வயம். மஹர்ஷிகள் ‘எம்பெருமானைத் தொழவேணும், துதிக்கவேணும், திருவாராதனம் செய்யவேணும்’ என்றிங்ஙனே பலபல பாரிப்புகள் கொண்டு பாடியாட என்றவாறு,
English Translation
Bards praise, “You cannot think of a better god’, and sing and dance beautiful Pann based songs, while gods praise, “You cannot find a better city,’ and offer flowers with worship, Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram, our destination.
