(1355)
கறையார் நெடுவேல் மறமன்னர் வீய விசயன் தேர்கடவி,
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த வெந்தையிடம்,
மறையால் மூத்தீ யவைவளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்,
பொறையால் மிக்க அந்தணர்வாழ் புள்ளம் பூதங் குடிதானே.
பதவுரை
|
கரை ஆர் நெடு வேல் மறம் மன்னர் வீய |
– |
ரத்தக்கறை மாறதே பொருந்தியிருக்கிற நீண்ட வேற்படையை யுடையவர்களான (துரியோதனாதி) பகை மன்னவர்கள் ஒழியும்படி |
|
விசயன் தேர் கடவி |
– |
அர்ஜுநனுடைய தேரை நடத்தினவனும், |
|
இறையான் கையில் நிறையாத முண்டம் |
– |
ருத்ரனுடைய கையில் ஒட்டிக்கொண்டதாய் ஒன்றாலும் நிரம்பாதிருந்த கபாலத்தை |
|
நிறைத்த |
– |
(பிச்சையிட்டு) நிறைத்தவனுமான |
|
எந்தை |
– |
எம்பெருமானுடைய |
|
இடம் |
– |
இருப்பிடமாவது |
|
மறையால் |
– |
வேதங்களாலும் |
|
முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் |
– |
நித்யாக்நிஹோத்ரம் செய்வதனாலுண்டான நிலைநின்ற கீர்த்தியினாலும் |
|
வண்மையால் |
– |
ஔதார்யத்தினாலும் |
|
பொறையால் |
– |
பொறுமையினாலும் |
|
மிக்க |
– |
மேன்மை பெற்ற |
|
அந்தணர் |
– |
பிராமணர்கள் |
|
வாழ் |
– |
வாழப்பெற்ற |
|
புள்ளம் பூதங்குடி, |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “மறையால் முத்தீயவை வளர்க்கும்” என்று சேர்த்து அந்லயித்து, வேதங்களைக் கொண்டு அனலோம்புகிறவர்கள் என்றுரைத்தலுமாம்.
English Translation
The Lord who drove the chariot in war for Vijayan, and killed the armed and angry kings, then also filled the un-fillable skull-begging-bowl of Siva, resides –where Vedic seers of lasting fame, forgiveness and patience tend the three sacred fires with proper Vedic chants, – in pullam-Budangudi, yes, always!
