(1445)

(1445)

எண்ணில்நினை வெய்தியினி யில்லை யிறை யென்றுமுனி யாளர் திருவார்,

பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு கூட எழிலார்,

மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள் தாம லர்கள்தூய்

நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே.

 

பதவுரை

எண்ணில்

ஆராயுமளவில்

நினைவு எய்தி இறை

தியானத்திற்கு இலக்காகக் கூடிய ஸ்வாமி

இனி இல்லை என்று

இவனைக் காட்டிலும் வேறொருவனில்லை யென்று (நிச்சயித்து)

முனியாளர்

மஹாமுனிகள்

திரு ஆர் பண்ணில் மலி

அழகுமிக்க இசையினால் நிறைந்த

கீதமொடு பாடி

பாடல்களோடு கூட ஸ்துதிகள் செய்ய,

அவர் ஆடலொடு கூட

அந்த முனிவர் (தங்கள் பாட்டுக்குச் சேரத் தாங்களே செய்கின்ற) நர்த்தனங்களுக்குத் தகுதியாக,

வானவர்கள் தாம்

தேவர்கள்

எழில் ஆர் மண்ணில்

இப்பூலோகத்தில்

இது போலும் நகர் இல்லை என

இத்திருப்பதியைப் போன்ற நகரம் (எங்கும்) இல்லை’ என்று கொண்டாடி

மலர்கள் தூய்

புஷ்பங்களைப் பணிமாறி

நண்ணி

ஆச்ரயித்து

உறைகின்ற

நித்யவாஸமும் செய்யப்பெற்ற

நகர்

திவ்யதலமாகிய

நந்திபுரவிண்ணகரம், மனமே நண்ணு–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸநகஸநந்தநாதி மஹர்ஷிகள் ‘இப்பெருமானன்றிப் பரதெய்வம் பிறிதொன்றுமில்லை’ என்று துணிந்து ழூபண்ணார் பாடலில் கவிகளைச் சொல்லிப் பாடி ஆடுகின்றனராம்; அவர்களோடு கூட வானவர்களும் ‘பூமண்டலத்தில் இதுபோன்ற திவ்யதேசம் வேறொன்றில்லை’ என்று புகழ்ந்துகொண்டு திரண்டு வாழ்கின்றனராம்.  ஆகவிப்படி முனிவருமமரரும் தொழுதேத்தி இறைஞ்சுமிடமான நந்திபுரவிண்ணகரத்தை மனமே! நண்ணு என்றாராயிற்று.

(நினைவு எய்தி,) ‘எய்தி’ என்பது வினையெச்ச மன்று; பெயர்ச்சொல்; எய்து – பகுதி; இ-பெயர்விகுதி.  எய்துமவன் என்கை.  (நினைப்பாருடைய) நினைவுகளை எய்துமவன் – த்யானத்திற்கு விஷயமாயிருக்குமவன் என்றபடி.  இனி ‘எய்தி’ என்றவிதனை வினையெச்சமாகக்கொண்டு முரைக்கலாம்; எண் இல் – கணக்கில்லாத (அளவிறந்த), நினைவு – எண்ணங்களை எய்தி – அடைந்து, ‘முனியாளர் கீதமொடுபாடி, என்றதோடு அந்வயம்.  மஹர்ஷிகள் ‘எம்பெருமானைத் தொழவேணும், துதிக்கவேணும், திருவாராதனம் செய்யவேணும்’ என்றிங்ஙனே பலபல பாரிப்புகள் கொண்டு பாடியாட என்றவாறு,

 

English Translation

Bards praise, “You cannot think of a better god’, and sing and dance beautiful Pann based songs, while gods praise, “You cannot find a better city,’ and offer flowers with worship, Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram, our destination.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top