(1365)

(1365)

கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்

மலைவா ழெந்தை மருவு மூர்போல்,

இலைதாழ் தெங்கின் மேல்நின்று,

இளநீர்க் குலைதாழ் கிடங்கின் கூட லூரே!

 

பதவுரை

கலை

–

ஆண்மான்கள்

பிணையோடு

–

பெண்மான்களோடு

அணை வாழும்

–

சேர்ந்து வாழும்படியான

திருநீர்மலை

–

திருநீர்மலையிலே

வாழ்

–

வாழ்கின்ற

எந்தை

–

எம்பெருமான்

மருவும்

–

பொருந்திவாழப்பெற்ற

ஊர்

–

திவ்யதேசம்;-

இலை தாழ்

–

மட்டைகள் தழைத்திருக்கிற

தெங்கின் மேல் நின்ற

–

தென்னைமரங்களின் மேலிருக்கிற

இளநீர் குலை

–

இளநீர்க் குலைகள்

தாழ்

–

(தம்மேல்) தாழ்ந்திருக்கப்பெற்ற

கடங்கின்

–

நீர்நிலைகளையுடைய

கூடலூர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இலைதாழ் இத்யாதி.) படர்ந்த இலைகளையுடைய தென்னைமரங்கள் குளங்களின் கரையிலே நிற்கும்; அவற்றிலுண்டான இளநீர்க் குலைகளானவை தாழ்ந்து நிற்கிற போது, குளங்களை இளநீராலே நிறைத்து இலைகளாலே மறைத்துவைத்தாற்போலே யிருக்குமாயிற்று.  நின்ற + இளநீர், நின்றிளநீர்; தொகுத்தல்.

 

English Translation

The Lord who resides in Tirunirmalai with deer-pairs resting in company has come to reside in Kudolur where coconut bunches hang low on trees, over leaves of the Betel Creeper that surrounds it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top