(1475)
முளிதீந்த வேங்கடத்து மூரிப்பெ ருங்களிற்றால்,
விளிதீந்த மாமரம்போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தைநின்பா, லடியேற்க்கு, வானுலகம்
தெளிந்தேயென் றெய்துவது? திருவிண் ணகரானே.
பதவுரை
|
திரு விண்ணகரானே!- ; |
||
|
முளிந்து தீந்த |
– |
உலர்ந்து தீஞ்சுபோன |
|
வெம் கடத்து |
– |
வெவ்விய பாலைநிலத்திலே |
|
மூரிப் பெருங்களிற்றால் |
– |
வலிய பெரிய யானையினால் |
|
விளிந்து |
– |
தள்ளப்பட்டு |
|
தீந்து |
– |
கெட்டுப்போன |
|
மா மரம் போல் வீழ்ந்தாரை |
– |
பெரியமரங்கள் போல் தொலைந்து போனவர்களை |
|
நினையாதே |
– |
நினையாமல் |
|
நின்பால் |
– |
உன்னிடத்தில் |
|
அளிந்து ஓர்ந்த சிந்தை அடியேற்கு |
– |
கனிந்து தெளிந்த மனமுடையேனான எனக்கு |
|
தெளிந்து |
– |
இந்த ஸம்ஸாரக் கலக்கங்கள் நீங்கி |
|
வான் உலகம் எய்துவது என்று |
– |
பரமபதம் அடையும் நாள் எதுவோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தீக்ஷணமான மருகாந்தாரத்திலே வலிதான ஒரு யானையாலே தள்ளப்பட்டு உருமாய்ந்துபோகிற பெரிய மரங்கள் போலே இவ்வுலகில் எத்தனையோ பலசாலிகள் கருமங்களாலே முடிக்கப்பட்டு முடிந்து போகிறார்களாதலால் இப்படிப்பட்ட ஸம்ஸாரத்தை ஒரு பொருளாக மதியாமல் பரம தயாளுவான தேவரீர் பக்கலிலே நெஞ்சைச் செலுத்தியிருக்கும் அடியேனக்குப் பரமபதம் கிடைக்கும் நாள் எதுவோ அந்நாளை யருளிச் செய்யவேணும் திருவிண்ணகரப்பனே! – என்கிறார்.
முளிந்து + தீந்த, முளிந்தீந்த; விளிந்த + தீந்த, விளிந்தீந்த. (சங்கு + கதை, சங்கதை என்றாவது போல.) வெம் கடம் – கடூரமான பாலைநிலம். ஸம்ஸாரமே முள்நிதீந்த வெங்கடமாகவும், கருமங்களே மூரி்ப்பெருங்களிறாகவும், மாண்டொழிந்த அரசர்கள் விளிந்தீந்த மாமரமாகவும் கொள்க.
English Translation
O Lord of Tiruvinnagar! I Like a mighty elephant pushing a dead long in a once dense forest destroyed by fire, do not brush me aside. I have come to you with clear thought and a loving heart. When will you grant me the sky-world?
