(1473)

(1473)

மையொண் கருங்கடலும் நிலனு மணிவரையும்,

செய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை, நெஞ்சில்

உய்யும் வகையுணர்ந்தே உண்மையாலினி யாது மற்றோர்

தெய்வம் பிறிதறியேன் திருவிண் ணகரானே.

 

பதவுரை

திரு விண்ணகரானே!- ;

மை ஒண் கருங்கடலும்

மை போன்று அழகியதாய்க் கறுத்திருக்கின்ற ஸமுத்ரமும்

நிலனும்

பூமியும்

மணி வரையும்

சிறந்த பர்வதங்களும்

செய்ய இரண்டு சுடரும்

அழகிய சந்த்ர ஸூர்யர்களும்

இவை ஆய நின்னை

ஆகிய இப்பொருள்களாய் விரிந்துநிற்கிற வுன்னை

நெஞ்சில்

நெஞ்சினால்,

உய்யும் வகை

நான் உஜ்ஜீவிக்கும்படி

உண்மையால் உணர்ந்தேன்

உள்ளபடி தெரிந்து கொண்டேன்!

இனி

இப்படியான பின்பு

மற்று

இதற்குமேலே

பிறிது ஓர் தெய்வம் யாதும் அறியேன்

எவ்விதமான தேவதாந்தரத்தையும் நினைக்கமாட்டேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “மற்றோர் தெய்வமெண்ணேன்” என்றதை ஹேதுவோடே உபபாதிக்கிறரிதில்.  திருவிண்ணகர்ப்பெருமானே!, ஸப்தஸாகரங்கள், அவற்றால் சூழப்பட்ட பூமி, அதற்கு ஆணியடித்தாற்போலே யிருக்கிற குலாசலங்கள், சந்திரன் ஸூர்யன் முதலிய சுடர்ப்பொருள்கள் ஆகிய இவையெல்லாம் நீயே; உன் உருவமே இவையெல்லாம் என்று நான் நன்குணரப்பெற்றேனாதலால் ஸர்வசரீரியான உன்னைவிட்டு உனது சரீரமான தேவதாந்திரங்களைத் தெய்வமாக நெஞ்சில் தான் நினைப்பேனோ? இதுவரையில் நான் அழிந்துபோனதுபோலல்லாமல் இனி உஜ்ஜீவிக்க ப்ராப்தனாயினேனாதலால் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்றாராயிற்று.

 

English Translation

O Lord of Tiruvinnagar!   You are the dark ocean, the Earth, the beautiful mountains, the radiant twin orbs, and all else.  Through truthfulness I realised the path of elevation of spirit.  Now, other than you, I know of no other god.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top