(1473)
மையொண் கருங்கடலும் நிலனு மணிவரையும்,
செய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை, நெஞ்சில்
உய்யும் வகையுணர்ந்தே உண்மையாலினி யாது மற்றோர்
தெய்வம் பிறிதறியேன் திருவிண் ணகரானே.
பதவுரை
|
திரு விண்ணகரானே!- ; |
||
|
மை ஒண் கருங்கடலும் |
– |
மை போன்று அழகியதாய்க் கறுத்திருக்கின்ற ஸமுத்ரமும் |
|
நிலனும் |
– |
பூமியும் |
|
மணி வரையும் |
– |
சிறந்த பர்வதங்களும் |
|
செய்ய இரண்டு சுடரும் |
– |
அழகிய சந்த்ர ஸூர்யர்களும் |
|
இவை ஆய நின்னை |
– |
ஆகிய இப்பொருள்களாய் விரிந்துநிற்கிற வுன்னை |
|
நெஞ்சில் |
– |
நெஞ்சினால், |
|
உய்யும் வகை |
– |
நான் உஜ்ஜீவிக்கும்படி |
|
உண்மையால் உணர்ந்தேன் |
– |
உள்ளபடி தெரிந்து கொண்டேன்! |
|
இனி |
– |
இப்படியான பின்பு |
|
மற்று |
– |
இதற்குமேலே |
|
பிறிது ஓர் தெய்வம் யாதும் அறியேன் |
– |
எவ்விதமான தேவதாந்தரத்தையும் நினைக்கமாட்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “மற்றோர் தெய்வமெண்ணேன்” என்றதை ஹேதுவோடே உபபாதிக்கிறரிதில். திருவிண்ணகர்ப்பெருமானே!, ஸப்தஸாகரங்கள், அவற்றால் சூழப்பட்ட பூமி, அதற்கு ஆணியடித்தாற்போலே யிருக்கிற குலாசலங்கள், சந்திரன் ஸூர்யன் முதலிய சுடர்ப்பொருள்கள் ஆகிய இவையெல்லாம் நீயே; உன் உருவமே இவையெல்லாம் என்று நான் நன்குணரப்பெற்றேனாதலால் ஸர்வசரீரியான உன்னைவிட்டு உனது சரீரமான தேவதாந்திரங்களைத் தெய்வமாக நெஞ்சில் தான் நினைப்பேனோ? இதுவரையில் நான் அழிந்துபோனதுபோலல்லாமல் இனி உஜ்ஜீவிக்க ப்ராப்தனாயினேனாதலால் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்றாராயிற்று.
English Translation
O Lord of Tiruvinnagar! You are the dark ocean, the Earth, the beautiful mountains, the radiant twin orbs, and all else. Through truthfulness I realised the path of elevation of spirit. Now, other than you, I know of no other god.
