(1463)

(1463)

கல்லா வைம்புலன் களவை கண்டவா செய்யகில்லேன்,

மல்லா, மல்லம ருள்மல் லர்மாள மல்லடர்த்த மல்லா,

மல்லலம் சீர்மதிள் நீரிலங் கையழித்த

வில்லா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.

 

பதவுரை

கல்லா

கல்விபயிரா (சாஸ்த்ர நெறியில் நிற்கமாட்டாத)

ஐம்புலன்கள் அவை

பஞ்சேந்திரியங்களானவை

கண்ட ஆறு

செய்ய நினைத்தவிதமாக

செய்யகில்லேன்

நான் செய்யமாட்டுகின்றிலேன்;

மல்லர்

வலிமையுள்ள பெருமானே!,

மல் அமருள்

மற்போரில்

மல்லர் மாள

(சாணூரன் முதலிய) மல்லர்கள் முடியும்படியாக

மல் அடர்த்த

(அவர்களுடைய) வலியையழித்த

மல்லா

மல்தொழில் வல்லவனே!,

மல்லம் அம் சீர்

மிகவும் அழகிய செல் வத்தையுடைத்தாய்

மதிள்

மதிள்களால் சூழப்பட்டதாய்

நீர்

சுற்றிலும் நீர்க்கோட்டையை யுடைத்தான

இலங்கை

லங்காபுரியை

அழித்த

நாசம்செய்த

வில்லா

சார்ங்கத்தையுடையவனே!

திருவிண்ணகர்மேயவனே!- ;

நின் அடைந்தேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விசித்ரா தேஹஸம்பத்தி ரீச்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந்! ஹஸ்த பாதாதிஸம்யுதா” என்று செவி வாய் கண் மூக்கு முதலிய கரணங்கள் உன்னுடைய திருப்புகழ்களைக் கேட்பது மொழிவது முதலிய கார்யங்களுக்காக ஏற்பட்டவை; அப்படிப்பட்ட அவை அவ்வழியில் நில்லாதே அல்வழியிற் செல்லுகின்றனவே பாவியேனுக்கு; அவை இழுத்துக்கொண்டு போகிறவழியே நான் செல்வதென்றால் இது என்னாலாகுமோ? “பூணாரமார்பனைப் புள்ளுறும் பொன்மலையைக் காணாதார் கண்ணென்றுங் கண்ணல்லகண்டாமே” என்றும், “தொண்டர்க்கினியானைக் கேளாச்செவிகள் செவியல்ல கேட்டாமே” என்றும் உறுதிகொண்டிருக்கிற நான் விஷயாந்த்ரங்களில் மண்டித்திரிகிற நெஞ்சை அநுசரித்து நடக்கவுரியவனோ? என்கிறார் முதலடியால். மற்போராவது ஆயுதங்களின் உதவியின்றியே தேஹ வலிமையையேகொண்டு நடத்தும் யுத்தம்.

மல்லலஞ்சீர்மதிள் நீரிலங்கை = முதலிலே அனுமான் இலங்கையிற்புகுந்து அந்நகரின் சீர்மைகளைக்கண்டு வியந்து “யத்யதர்மோ ந பலவாந் ஸ்யாதயம் ராக்ஷஸேச்வர – ஸ்யாதயம் ஸுரலோகஸ்ய ஸசக்ரஸ்யாபி ரக்ஷிதா” (இந்த ராக்ஷஸ ராஜனிடத்தில் அதர்மம் ஒன்றுமாத்திரம் இல்லா திருந்தால் இந்த்ரலோகத்தையும் அடக்கி ஆளக்கூடியவனன்றோ இவன்) என்று சொன்னது இங்கு நினைக்கத்தக்கது.  மல்லல் – மிகுதி, வலி, வளம்.

 

English Translation

O Lord residing in Tiruvinnagar!  No more can I work for the uncultivated ways of my senses.  O strong wrestler who wrestled with the wrestlers!  O Bow-wielder who destroyed the prosperous walled city of Lank I have come to your feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top