(1453)

(1453)

கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர்கெழு முலகமு மாகி,முத

லார்களு மறிவரு நிலையினையாய்ச் சீர்கெழு நான்மறை யானவனே

ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.

 

பதவுரை

கார் கெழு

மேகங்கள் மிகப்படிந்திருக்கப் பெற்ற

கடல்களும்

ஸமுத்ரங்களுக்கும்

மலைகளும்

மலைகளுக்கும்

ஆய்

தாரகனாயும்

ஏர் கெழும்

ஒழுங்குபட்டிருக்கிற

உலகமும் ஆகி

லோகங்களுக்கும் நிர்வாஹகனாயும்

முதலார்களும்

பிரதாநரான பிரமன் முதலியோர்க்கும்

அறிவு அரு நிலையினை ஆய்

அறிய முடியாத ஸ்வபாவத்தை யுடையவனாயும்

சீர் கெழு நால் மறை ஆனவனே

சிறந்த நான்கு வேதங்களுக்கும் ப்ரதிபாத்யனாயு மிருக்கும் பெருமானே,

ஆண்டாய் * * * வேண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மேகங்கள் நீர்கொண்டெழுவதற்காகப் படியும் கடல்களையும் மலைகளையும் ஸ்வஸங்கல்பத்தால் நிலைநிறிகச் செய்தருள்பவனே!, ஸகலசராசரங்களையும் சரீரமாகக் கொண்டுள்ளவனே!, பிரமன் சிவனிந்திரனென்று பெருமதிப்பாகச் சொல்லப்படுகின்ற தேவர்களாலும் ‘இப்பாப்பட்டது இவ்வளவுடையது’ என்று அளவிட்டறிய முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களையுடையவனே!  நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுமவனே! நீ இப்படிப்பட்டவனா யிருக்கிறயென்பதை நான் ஏட்டிலே கேட்டுப்போவதல்லாமல் உன்னுடைய அஸாதாரணாகாரத்தை நான ஸாக்ஷாத்கரிக்கும்படி என் பக்கலிலே அருள்செய்வாயாகில் நானும் மெய்யே இந்த ஸம்ஸார வாழ்க்கையை அருவருத்தேனாவேன் என்றாராயிற்று.

நம்மைப்போலே ஜனனமரணங்களை யுடையரான பிரமன் சிவன் முதலிய தேவர்களை ‘முதலார்களும்’ என்ற சொல்லாற் கூறியது – அவர்களை முழுமுதற் கடவுளாக நினைத்துப் போற்றும் பிறரது கொள்கையாலென்ப.  இனி, “முதலாவார் மூவரே என்ற பொய்கையார் ஸ்ரீஸூக்தி கொண்டு மென்னலாம்.

நான் மறையானவனே! = நால் வேதங்களையும் பயந்தருளினவனே! என்னவுமாம்.

 

English Translation

You became the oceans and mountains again, worlds in the world of creation above, you became the lotus-born Brahma-creator, and the proper chants of the Vedas four, O Lord if you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top