(1323)

(1323)

ஞால முற்று முண்டுமிழிந்த நாத னென்றும், நானி லஞ்சூழ்

வேலையன்ன கோலமேனி வண்ண னென்றும், மேலெழுந்து

சேலு களும்வயல் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,

பாலின் நல்ல மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.

 

பதவுரை

பாலின் நல்ல மெல் மொழியாள்

பாலைக்காட்டிலும் மதுரமாய் மிருதுமான சொற்களையுடையளான என் பெண்ணானவள்,

ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும்

உலகம் முழுவதையும் (பிரளத்தில்) திருவயிற்றிலடக்கி (ப் பிறகு) வெளிப்படுத்திய ஸ்வாமி என்றும்,

நானிலம் சூழ் வேலை அன்ன

பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிற கடல்போன்ற

கோலம் மேனி வண்ணன் என்றும்

அழகியதான திருமேனி நிறமுடையவ னென்றும்,

சேல் மேல் எழுத்து உகளும் வயல் கொள் நாங்கை

மீன்கள் மேலே எழும்பித் துள்ளாநிற்கப்பெற்ற கழனிகளையுடைய திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற

தேவதேவன் என்று என்று ஓதி

தேவாதிதேவன் என்றும் பலகால் சொல்லிக்கொண்டு

பார்த்தன் பள்ளி பாடுவாள் –.

 

English Translation

“Lord who swallowed all the worlds and brought them out in time again!” “Lord of dark adorable hue, like the ocean, -deep in a sleep!” “Dancing, set-fish fields in Nangai, “Deva-deva’s paradise!”, speech-of-milk-and-nectar sweet, my daughter sings of Parttan-Palli O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top