(1125)
மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க வேத முரைப்பர்முந் நீர்மடந்தை
தேவி,அப் பாலதிர் சங்கமிப்பால் சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்,
காவியொப் பார்க்கட லேயுமொப்பார் கண்ணும் வடிவும் நெடியராய்,என்
ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.
பதவுரை
|
விண்னோர் |
– |
நித்யஸுரிகள் |
|
எப்பாலும் மேவி |
– |
சுற்றிலும் சூழ்ந்துகொண்டு |
|
வணங்க |
– |
வணங்கப்பெற்று |
|
வேதம் உரைப்பர் |
– |
(இப்பெரியவர்) வேதங்களை உருச்சொல்லுகின்றார்; |
|
முந்நீர் மடந்தை |
– |
கடலிற்பிறந்த கமலையானவள்; |
|
தேவி |
– |
பட்டமஹிஷியாயிரா நின்றாள் |
|
அதிர் சங்கம் |
– |
முழங்குகின்ற சங்கானது |
|
அப்பால் |
– |
இடத்திருக்கையிலுள்ளது; |
|
சக்கரம் |
– |
திருவாழியானது |
|
இப்பால் |
– |
வலத்திருக்கையிலுள்ளது; |
|
மற்று |
– |
இதற்குமேல் |
|
இவர் வண்ணம் எண்ணில் |
– |
இவருடைய நிறத்தை ஆராய்ந்து சொல்லப்புகுந்தால் |
|
காவி ஒப்பார் |
– |
கருநெய்தல் பூவின் நிறத்தை ஒத்திருக்கின்றார்; |
|
கடலும் ஒப்பார் |
– |
ஸமுத்ரத்தையும் ஒத்திருக்கின்றார்; |
|
கண்ணும் வடிவும் நெடியர்ஆய் |
– |
திருக்கண்களிலும் வடிவழகிலும் அளவிறந்தவராய் |
|
என் ஆவி ஒப்பார் இவர் |
– |
என் உயிரை ஒத்திருக்கின்ற இவர் |
|
ஆர்கொல் என்ன—; |
||
|
அட்டபுயகரத்தேன் என்றார்–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- என்முன்னே வந்து தோற்றின பெரியவர் தனியராய் வந்திலர்; நித்யஸுரிகள் சுற்றிலும் சூழ்ந்து வணங்காநிற்க வந்தார்; வாயில் நல்வேதமோதும் வேதியரென்று விளங்கும்படி வேதங்களை ஓதிக்கொண்டு வந்தார்; அருகில் திருமகள் தேவியாகத் திகழ்ந்தனள்; இறாபுறத்திலும் திருவாழி திருச்சங்குகள் பொலிந்தன: கருநெய்தற்பூவோ! கடல்தானோ! என்னும்படியான வடிவு தோன்றிற்று; அவ்வடிவழகுக்கும் கண்ணழகுக்கும் எல்லை காணமுடியவேயில்லை: நம்முடைய பிராணண்தான் இங்ஙனே உருவெடுத்து வெளித்தோன்றுகின்றதோ என்று நினைக்கலாம்படி பரமப்ரிதிக்கு இலக்காயிருந்தார். இப்படி நித்யஸுரிகளும் பிராட்டிமாரும் திவ்யாயுதங்களும் திவ்யமங்கள விக்ரஹமும் ஸ்பஷ்டமாக விளங்கச்செய்தேயும் இவரை இன்னாரென் றறுதியிடமாட்டாத நான் இவரார் கொல்! என்றேன்; ‘நான் தான் அட்டபுககரத்தேன’; என்றார்–என்கிறாள்.
மடந்தை–பத்தொன்பது வயதுள்ள பெண்: பொதுவாகப் பெண்பாலுக்கும் பெயராக வழங்கும்:
English Translation
Gods on every side stood and offered worship with Vedic chants, the lady of-the sea Lakshmi was his consort. On that side was the vibrant conch, on this side the dicus. Come to describe his colour, -was he lotus-red, or was he ocean-blue?, -his eyes and his frame sarik deeply into my soul. Who could this be, I wondered. “I am the Lord of Attabuyakaram”, he said.
