(1125)

(1125)

மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க வேத முரைப்பர்முந் நீர்மடந்தை

தேவி,அப் பாலதிர் சங்கமிப்பால் சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்,

காவியொப் பார்க்கட லேயுமொப்பார் கண்ணும் வடிவும் நெடியராய்,என்

ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

 

பதவுரை

விண்னோர்

நித்யஸுரிகள்

எப்பாலும் மேவி

சுற்றிலும் சூழ்ந்துகொண்டு

வணங்க

வணங்கப்பெற்று

வேதம் உரைப்பர்

(இப்பெரியவர்) வேதங்களை உருச்சொல்லுகின்றார்;

முந்நீர் மடந்தை

கடலிற்பிறந்த கமலையானவள்;

தேவி

பட்டமஹிஷியாயிரா நின்றாள்

அதிர் சங்கம்

முழங்குகின்ற சங்கானது

அப்பால்

இடத்திருக்கையிலுள்ளது;

சக்கரம்

திருவாழியானது

இப்பால்

வலத்திருக்கையிலுள்ளது;

மற்று

இதற்குமேல்

இவர் வண்ணம் எண்ணில்

இவருடைய நிறத்தை ஆராய்ந்து சொல்லப்புகுந்தால்

காவி ஒப்பார்

கருநெய்தல் பூவின் நிறத்தை ஒத்திருக்கின்றார்;

கடலும் ஒப்பார்

ஸமுத்ரத்தையும் ஒத்திருக்கின்றார்;

கண்ணும் வடிவும் நெடியர்ஆய்

திருக்கண்களிலும் வடிவழகிலும் அளவிறந்தவராய்

என் ஆவி ஒப்பார் இவர்

என் உயிரை ஒத்திருக்கின்ற இவர்

ஆர்கொல் என்ன—;

அட்டபுயகரத்தேன் என்றார்–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்முன்னே வந்து தோற்றின பெரியவர் தனியராய் வந்திலர்;  நித்யஸுரிகள் சுற்றிலும் சூழ்ந்து வணங்காநிற்க வந்தார்;  வாயில் நல்வேதமோதும் வேதியரென்று விளங்கும்படி வேதங்களை ஓதிக்கொண்டு வந்தார்;  அருகில் திருமகள் தேவியாகத் திகழ்ந்தனள்; இறாபுறத்திலும் திருவாழி திருச்சங்குகள் பொலிந்தன:  கருநெய்தற்பூவோ!  கடல்தானோ! என்னும்படியான வடிவு தோன்றிற்று;  அவ்வடிவழகுக்கும் கண்ணழகுக்கும் எல்லை காணமுடியவேயில்லை:  நம்முடைய பிராணண்தான் இங்ஙனே உருவெடுத்து வெளித்தோன்றுகின்றதோ என்று நினைக்கலாம்படி பரமப்ரிதிக்கு இலக்காயிருந்தார்.  இப்படி நித்யஸுரிகளும் பிராட்டிமாரும் திவ்யாயுதங்களும் திவ்யமங்கள விக்ரஹமும் ஸ்பஷ்டமாக விளங்கச்செய்தேயும் இவரை இன்னாரென் றறுதியிடமாட்டாத நான் இவரார் கொல்! என்றேன்;  ‘நான் தான் அட்டபுககரத்தேன’; என்றார்–என்கிறாள்.

மடந்தை–பத்தொன்பது வயதுள்ள பெண்: பொதுவாகப் பெண்பாலுக்கும் பெயராக வழங்கும்:

 

English Translation

Gods on every side stood and offered worship with Vedic chants, the lady of-the sea Lakshmi was his consort. On that side was the vibrant conch, on this side the dicus. Come to describe his colour, -was he lotus-red, or was he ocean-blue?, -his eyes and his frame sarik deeply into my soul. Who could this be, I wondered. “I am the Lord of Attabuyakaram”, he said.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top