(1124)

(1124)

முழுசிவண் டாடிய தண்டுழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும், மேனியஞ்சாந்

திழிசிய கோல மிருந்தவாறும் எங்ஙனஞ் சொல்லுகேன். ஓவிநல்லார்,

எழுதிய தாமரை யன்னகண்ணும் ஏந்தெழி லாகமும் தோளும்வாயும்,

அழகிய தாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

 

பதவுரை

வண்டு முழுசி ஆடிய

வண்டுகள் (தேனிலே) முழுகிக் கூத்தாடா நிற்கப்பெற்ற

தண் துழாயின்

குளிர்ந்த திருத்துழாயினால்

மொய் மலர் கண்ணி இருந்த ஆறும்

செறியத் தொடுக்கப்பட்ட புமாலை சாத்தியிருக்கும் படியையும்

மேனி அம் சாந்து இழுசிய கோலம் இருந்த ஆறும்

திருமேனியிலே அழகிய சந்தனம் பூசப்பெற்ற அலங்கார மிருக்கும்படியையும்

எங்ஙனம் சொல்லுகேன்

என்னவென்று சொல்லுவேன்;

ஒவி நல்லார் எழுதிய

சித்ரமெழுதுவதில் வல்லவர்கள் எழுதினவை யென்னலாம் படியுள்ள

தாமரை அன்ன கண்ணும்

தாமரை யிதழ்போன்ற திருக்கண்களும்

ஏந்து எழில் ஆகமும்

மிக்க அழகையுடையய திருமார்வும்

தோளும்

திருத்தோள்களும்

வாயும்

திருப்பவளமும்

அழகியது ஆம் இவர்

அழகியவாக அமையப்பெற்ற இவர்

ஆர்கொல் என்ன—;

அட்டபுகரத்தேன் என்றார்–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தேனொழுகுகின்ற திருத்துழாழ்மாலையைச் சாத்திக் கொண்டிருந்த அழகும் சந்தனக்காப்பு சாத்திக்கொண்டிருந்த அழகும்; என்ன சொல்லுவேன்!;  அன்றியும், திருக்கண்களும் திருமார்பும் திருத்தோள்களும் திருப்பவளமும் சித்திரமெழுதவல்லவர்களால் எழுதப்பட்டவைபோன்று எவ்வகைக் குறையும் கூறவொண்ணாதபடி அழகு விஞ்சியிருந்தன;  இப்படிப்பட்ட மஹாநுபாவர் யார்?  என்றேன்;  நான் தான் அட்டபுயகரத்தேன் என்றார்–என்கிறாள்.

(மேனி அஞ்சாந்து இழுசிய கோலம்.)  முன்பு க்ருஷ்ணாவதாரத்தில் கூனியிடம் இரந்துபெற்ற அழகிய சந்தனத்தைப் பூசிக்கொண்டு பொலிந்த அழகை ஏட்டிலே கேட்டிருந்தோம்; இன்று நேரே காணப்பெற்றோம் என்கிறாள் போலும்.

ஓவிநல்லார் = சித்திரமெழுதுபவர்கட்கு ‘ஓவியர்’ என்று பெயர்; நல் ஓவியர் என்க. “ஓவினல்லார்” எனப்பாடங்கொண்டு, ‘ஓவில் நல்லார்’ என்று பிரித்து, ஓவில்–சித்திரமெழுதுவதில், நல்லார்–சிறந்தவர்கள் என்றுபொருள் கொள்வாருமுளர்.  “ஓவிநல்லாரெழுதிய” என்ற அடைமொழியைத் தாமரையிலே அந்வயித்து, சித்திரக்காரரால் எழுதப்பட்ட தாமரை யாதொன்றுண்டு, அதுபோன்ற திருக்கண்கள் என்றுரைப்பாருமுண்டு.

 

English Translation

Bees hovering on his cool Tulasi garland, Sandal paste smeared on his face, – O How can I describe this?, – like a painted picture of the lotus, his two eyes, his chest, his arms, and his mouth, were all very beautiful. Who could this be, I wondered. “I am the lord of Attabuyakaram!” he said.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top