(1123)

(1123)

எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில் ஏது மறிகிலம், ஏந்திழையார்

சங்கும் மனமும் நிறைவுமெல்லாம் தம்மன வாகப் புகுந்து,தாமும்

பொங்கு கருங்கடல் பூவைகாயாப் போதவிழ் நீலம் புனைந்தமேகம்,

அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

 

பதவுரை

நாம்

நாம்;

இவர் வண்ணம்

இவருடைய படிகளை

எங்ஙன் எண்ணிலும்

எவ்விதமாக அறியப் பார்த்தாலும்

ஏதும் அறிகிலம்

ஒன்றும் அறிய மாட்டுகின்றிலோம்:

ஏந்து இழையார்

ஆபரணம் பூண்டிருப்பவர்களான மாதர்களுடைய

சங்கும்

வளைகளும்

மனமும்

நெஞ்சும்

நிறைவும் எல்லாம்

அடக்கமுமாகிய எல்லாமும்

தம்மன ஆக

தம்முடையதாம்படி

புகுந்து

இவ்விடம் வந்து சேர்ந்து,

பொங்கு கருகடல்

அலையெறிகின்ற கூரிய ஸமுத்ரமென்ன

பூவை

பூவைப்பூவென்ன

காயா

காயாம்பூவென்ன

போது அவிழ் நீலம்

காலத்திலே அலர்ந்த கருநெய்தற்பூவென்ன

புனைந்த மேகம்

அழகிய மேகமென்ன

அங்ஙனம் போன்ற இவர் தாம்

இவற்றைப் போலேயிருக்கிற இவர்

ஆர்கொல் என்ன—;

அட்டபுகரத்தேன் என்றார்–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  மேலெழுந்தவாரியாகப் பார்த்துவிடாதே உள்ளிழிந்து எவ்வளவுதூரம் ஆராய்ந்து பார்த்தாலும் இப்பெரியவருடைய படிகளொன்றும் தெரிகின்றதில்லை;  இவர் இங்குவந்தது ஸ்த்ரிகளுடைய ஸர்வஸ்வத்தையும் கொள்ளை கொள்ளுதற்காகவேயாம்; இவருடைய வடிவோ பூவையும் காயாவும் நீலமும் மேகமும் போன்றுள்ளது;  இப்படிப்பட்ட இவர் ஆர்? என்றேன்; நான்தான் அட்டபுயகரத்தேன் என்றார்—என்கிறாள்.

எங்ஙனும் என்ற விடத்துள்ள உம்மையைப்பிரித்து எண்ணில் என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது.  அறிகிலம்=அறியகில்லோம் என்றவாறு. ஏந்திழையார்சங்கும் மனமும்நிறைவுமெல்லாம் தம்மனவாகப் புகுந்து ஸ்ரீ  ‘ஏந்திழையார்’ என்று பொதுவாக மாதர்களைச் சொல்லுகிறது;  அவர்களுடைய சங்கும் மனமும் நிறைவும் தம்மனவாகப் புகுகையாவது -இவரைக்கண்டவுடனே விரும்பினபடி கலவிசெய்யப் பெறாமையாலே உடல் இளைத்துக் கைவளைகள் கழன்றொழியும்படியும், நெஞ்சு இவரிடத்திலேயே பதிந்திருக்கும்படியும் அடக்கத்தை விட்டுப் பதறி மேல்விழும்படியும் செய்து கொள்ளுகை. தம்மன–தம்முடையவை.

“புனைந்தமேகம்” என்றவிடத்து, புனைந்த என்பதற்கு–கீழ்ச்சொன்ன கடல் முதலியவற்றோடு ஒருகோர்வையாகச் சேர்க்கப்பட்ட என்றும் பொருள் கொள்ளலாம்.

 

English Translation

No matter how much I saw him, I could not identify Him: He entered and took the jewels worn by the maidens, together with their hearts, their calm and all, then displayed his dark form, – the hue of the ocean, the Puvai flower, the Kaya flower, the blue lotus and the dark clouds. Seeing this, who could this be, I wondered. “I am the Lord of Attabuyakaram!” he said.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top