(1126)

(1126)

தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு,

வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி வாய்திறந் தொன்று பணித்ததுண்டு,

நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம் நானிவர் தம்மை யறியமாட்டேன்

அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

 

பதவுரை

தஞ்சம்

நிச்சயமாக

என் வளையும்

எனது கைவளைகளும்

இவர்க்கு நில்லா

இவரை நோக்கி (என் கையில்) நிற்கின்றன வில்லை;

சிந்தித்தேற்கு

நான் ஆராயுமளவில்

நெஞ்சமும்

எனது மனமும்

தம்மதே

இவருடையதேயாம்;

வஞ்சி மருங்குல்

வஞ்சிக்கொடிபோன்ற(எனது) இடையானது

நெருங்க

துவளும்படியாக

நோக்கி

கடாக்ஷித்து

வாய் திறந்து

தனது திருப்பவளத்;தைத் திறந்து

ஒன்று பணித்தது உண்டு

ஒருவார்த்தை சொன்னது முண்டு;

இவர் நோக்கும் நோக்கம்

இவர் பார்க்கிற பார்வையானது

நஞ்சம் உடைத்து

விஷங்கலந்ததுபோலே கொடிதாயிருக்கின்று;

நான் இவர் தம்மை அறிய மாட்டேன்

நான் இவருடைய படியை அறிகின்றிலேன்;

இவர் ஆர் கொல் என்ன

இவரார் என்று கேட்கவும்

அஞ்சுவன்

பயப்படுகின்றேன்;

(ஆயினும் தாமே)

அட்டபுயகரத்தேன் என்றார்–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்னுடைய கைவளைகளும் என்னுடைய நெஞ்சமும் என் பக்கலில் சிறிதும் தங்குகின்றன வில்லை;  அவரிடத்திலேயே சென்று சேர்ந்துவிட்டன; (அதாவது–உடம்பு மெலிந்து மூர்ச்சையுமடைந்தேன் என்றவாறு.)  இப்படி என்னிடத்திலுள்ளவற்றையெல்லாம் கொள்ளைகொண்ட பின்பும் ‘ இவளிடத்தில் இன்னமும் ஏதாவது தங்கிகிருப்பதுண்டாகில் அதையும் கொள்வோம்’ என்றெண்ணி என் இ;டையை உற்றுநோக்கி ஏதோவொரு வார்த்தையும் வாய்விட்டுச் சொன்னார்;  அவர் பார்க்கிற பார்வையோ கண்ணாலே கொளுத்துவதுபோல் கொடிதாயிராநின்றது;  இவர் நம்மை ரக்ஷிக்க வந்தவரா?  அல்லதுபக்ஷிக்க வந்தவரா என்று எனக்கு விளங்கவில்லை;  இவரார் கொல்?  என்று கேட்கவும் எனக்கு அச்சமுண்டாகிவிட்டது;  என்னுடைய அச்சத்தைத் தெரிந்துகொண்டு அவர் தாமே ‘என்னை வேற்றுருவாக நினைத்து அஞ்சவேண்டர் நீ அஞ்சவேண்டாதபடி அட்டபுயகரத்திலே எனியனாய் வந்து நிற்கிறவனன்றோ நான்’  என்றார்–என்கிறாள்,

“என்வளையும் இவர்க்கு நில்ல!”  என்றது – இவர்க்காகி, என்னிடத்திலே நில்லா என்றபடி.  “இங்கே குடியிருப்பாய் அவர்க்காக  வர்த்திக்கின்றனவா யிருந்தன”  என்பது வியாக்கியான வருளிச்செயல். – (சத்தியம்) என்ற வடசொல் தஞ்சமெனத் திரிந்தது; உண்மையாக என்கை.

 

English Translation

My bangles left my hands, seeking his refuge. My heart too became his. He looked hard at my Vanji-like slender waist and opened his mouth to speak a word. The glance he gave was full of sweet poison. I did not know who he was. Who could this be, I wondered. “I am the Lord of Attabuyakaram!”, he said.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top