(721)

(721)

கொங்குமலிகருங்குழலாள் கௌசலைதன்குலமதலாய்*

தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதீ*

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே*

எங்கள் குலத்தின்னமுதே இராகவனே! தாலேலோ.

பதவுரை

கொங்குமலி கருகுழலாள்

–

பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலையுடையளான
கௌசலை தன்

–

கௌஸல்யையினுடைய
குலம் மதலாய்

–

சிறந்த பிள்ளையானவனே!
தங்கு பெருபுகழ் சனகன்

–

பொருந்திய மஹாகீர்த்தியையுடைய ஜநக மஹாராஜனுக்கு
திரு மருகா

–

மாப்பிள்ளை யானவனே!
தாசரதீ

–

சக்ரவர்த்தி திருமகனே!
கங்கையிலும்

–

கங்காநதியிற் காட்டிலும்
மலி தீர்த்தம்

–

சிறப்பு மிக்க தீர்த்தங்களையுடைய
கணபுரத்து

–

திருக்கண்ணபுரத்திலெழுந்தருளியிருக்கிற

என் கருமணியே

எங்கள் குலம்

–

எங்கள் ராஜவம்சத்துக் கெல்லாம்
இன் அமுதே

–

போக்யமான அமுதம் போன்றவனே!

இராகவனே! தாலேலோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எங்கள் குலத்து இன்னமுதே – ஸ்ரீராமன் ராஜவம்ஸத்திற் பிறந்தாற்போல இக்குல சேகராழ்வாரும் ராஜவம்ஸத்திற் பிறந்தவராதலால் இங்ஙனமருளிச் செய்தாரென்க.

English Translation

Sleep, Sweet nectar, our tutelary deity, Raghava, Talelo, my Dark-gem-Lord of Kannapuram with rivers holier than the Ganga! You are the son of Dasaratha, son-in-law of Janaka -king of lasting fame. You are the emancipator of the lineage of fragrant dark-coiffured Queen Kousalya.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top